அன்புடன் வீ.கவிகணேசன் M.A.,B.L., MC 12வது மாமன்ற உறுப்பினர், பெருநகர சென்னை மாநகராட்சி, தலைமை கழக வழக்கறிஞர், திமுகழகம் [4/8, 12:13] sekarreporter1

[4/8, 12:11] Kavi: பெருநகர சென்னை ஆணையரின் பகுதி சபை கூட்டம் நடத்தப்பட வேண்டுமென்ற ஆணைக்கிணங்க திருவொற்றியூர் பன்னிரெண்டாவது வட்டத்தில்
முதல் பகுதி சபை கூட்டமானது
இராமானுஜம் தெருவில் 07/04/2023
அன்று மாலை 5 மணியளவில் துவங்கி இரவு 8 மணிவரை நடை பெற்றது
இராமானுஜம் தெரு, திருவள்ளுவர் தெரு,
குளோரியா குடியிருப்பு, திருவொற்றியூர் நெடுஞ்சாலை பகுதிகளில் வசிக்கும் மக்கள்
திரளாக பங்கேற்றனர்

நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களின் கோரிக்கைகள் வினாக்களுக்கு பதிலளித்த
அரசு அலுவலர்கள் , நிர்வாகிகள்

1)திரு.வீ.கவிகணேசன் MA.,BL.
பெருநகர சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்
திமுகழக தலைமை வழக்கறிஞர்
2)திரு.P.பிரகாஷ் – உதவி பொறியாளர்
பெருநகர சென்னை மாநகராட்சி
3)திரு.சுந்தரமூர்த்தி – வரி வசூலிப்பாளர்
4)திரு.மாதவன் – மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார மருத்துவமனை
5)திருமதி R.சாருமதி- சுகாதார ஆய்வாளர்
பெருநகர சென்னை மாநகராட்சி
6)திரு.S.பாபு-திடக்கழிவு மேலாண்மை
உதவி செயற்பொறியாளர்,
பெருநகர சென்னை மாநகராட்சி
7) திரு .பாஸ்கர் – துணை மேற்பார்வையாளர், தூய்மைப்பணி
8) திரு.க.வீ.சத்தீஷ் குமார் DME,Ex MC
வட்ட கழக செயலாளர் ,
திருவொற்றியூர் 12 வது வட்டம்
9) திரு.மாயா( எ) ருத்ர மூர்த்தி
10 ஆம் பகுதி வார்டு கமிட்டி உறுப்பினர்

இவர்களுடன்
திருமதி பாரதி,திரு.வீரராகவன் (ரவி) வார்டு கமிட்டிஉறுப்பினர்களும்
திருமதி.மாலதி EX MC அவர்களும் திமுகழக மாவட்ட பிரதிநிதி திரு.ஜெயராமன் ,
வட்டப் பிரதிநிதி திரு.ஜெயசீலன்
திரு.விஜயகுமார் – இளைஞரணி
திரு.R.K.பாலாஜி- தகவல் தொழில்நுட்ப அணி அவர்களும் நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பித்தனர்

நிகழ்ச்சி நிரல் சிறப்புற அமைய ஏற்பாடுகளை செய்த குழுவினர்
திரு.குணசெல்வன், திரு.பசுபதி, திரு.ரவி, திரு .பஷிர் அகமது, திரு.சத்திஷ், திரு.கொண்டைய்யா ,திரு. மகேந்திரன்

நிகழ்ச்சியின் தொடக்கமாக
கலைப்பை கிராமப்புற கலைக்குழுவினர்
தூய்மைபணியின் அத்தியாவசியத்தையும் கழிவுகளை தரம் பிரித்து தரவேண்டியதின் அவசியத்தையும் விளக்கும் விதமாக கிராமப்புற பாணியில் பறை இசைத்து விளக்கினர்
இடையிடையே அவர்களின் செயல்பாடு புரிந்ததா என்பதனை அறிந்துக் கொள்ள பொதுமக்களிடம் குறிப்பாக சிறுவர்களிடம் கேள்விகளை எழுப்பி அவர்களை உற்சாகப்படுத்தியது அருமை

கலை நிகழ்ச்சிக்குப் பிறகு
அனைவரையும் வரவேற்கும் விதமாக
நற்கருத்துகளை கூறி வரவேற்புரையை திரு.க.வீ.சத்தீஷ்குமார் வட்ட கழக செயலாளர் நிகழ்த்தினார்
பொதுமக்கள் தங்களுக்குறிய ஐயங்களை
எந்தவித தயக்கமுமின்றி அரசு அலுவலர்களிடம் கூறி விளக்கங்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் தங்கள் கோரிக்கைகளை அவர்களிடத்தில் அச்சமின்றி தெரிவிக்க முன்வர வேண்டுமென்றும் தன் வரவேற்புரையில்
குறிப்பிட்டு மக்களின் தயக்கத்தை போக்கிய விதம் அருமை

இராமனுஜம் தெருவில் குடியிருப்போர் சங்கத்தை சார்ந்தவர்கள் அரசு அலுவலர்களுக்கும் ,நிர்வாகிகளுக்கும் சால்வை அணிவித்து தங்கள் அன்பினை பகிர்ந்து கொண்டனர்

இராமனுஜம் மக்கள் சார்பாக வைக்கப்பட்ட
கோரிக்கைகள்
1) குடி நீர் தண்ணீர் வினியோகிக்கும் நேரம் காலையில் அல்லாமல் மாலையில் மாற்றி அமைக்க வேண்டும்
குடி நீர் குழாய்களில் நீர் வரும் வேகத்தை அதிகரிக்க வேண்டும்
சில வீடுகளில் குடி நீர் வினியோகிக்கப்படும் போது மின் மோட்டார்களை பயன்படுத்தி அதிக நீரை அவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள் எனவும் யாரென்று தெரிந்தும் அவர்கள் மீது தங்களால் நடவடிக்கை எடுக்க இயலாத சூழல் இருப்பதாகவும் குடி நீர் வழங்கல் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
கோரப்பட்டது

2) மின்சார தடை ஏற்படுவதை சரி செய்ய வேண்டும்
தெரு விளக்குகள் வெளிச்சம் சரியாக கிடைக்க வளர்ந்து நிற்கும் மரக்கிளைகளை வெட்ட வேண்டும்
( திங்கள் கிழமை சரி செய்து தரப்படும் என்று மாமன்ற உறுப்பினரால் உறுதியளிக்கப்பட்டது)
புதிய மின்மாற்றிகள் அமைத்து தர வேண்டும் ( ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் )
தெருவில் உள்ள கோயிலுக்கு மின் விளக்கு அமைத்து தர வேண்டும் ( ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்)

3) தெரு நாய்களின் எண்ணிக்கை அதிக அளவில் இருப்பதை குறைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் ( உரிய நடவடிக்கை எடுக்கப்படுமென மாமன்ற உறுப்பினர் கூறினார்)
4) பட்டா இல்லாதோருக்கு பட்டா கிடைத்திட
நடவடிக்கை எடுக்க வேண்டும்
5)மகளிர் சுய உதவிகுழுக்கள் அமைத்து மகளிர் வாழ்வாதாரம் மேம்பாடு அடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்
6)கழிவு நீர் செல்லும் பாதையில் உள்ள மூடிகள் மாற்றி அமைக்க வேண்டும்
7)இரவு நேரத்தில் தெரு முனையில் அமர்ந்து மது அருந்துகிறார்கள் அதனை தடுக்க காவல் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்
போன்ற கோரிக்கைகளை கூறி தெருவில் அமையவிருந்த டாஸ்மாக் கடையை அமையவிடாமல் தடுத்து தங்களின் கவலையை போக்கியமைக்கு மாமன்ற உறுப்பினருக்கும் ,வட்ட கழக செயலாளருக்கும் கையொலி எழுப்பி தங்கள் நன்றியினையும் மகிழ்ச்சியினையும் தெரிவித்துக் கொண்டனர்

திருவள்ளுவர் தெருவில் வசிப்போர்கள் சார்பாக பங்கேற்றவர்கள்
தங்கள் தெருவில் மழை நீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும் ,கழிவு நீர் அடைப்பு ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மின்கம்பம் சாய்ந்த நிலையில் உள்ளதை சரி செய்து தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்

திருவொற்றியூர் நெடுஞ்சாலை ரமேஷ் ஹார்ட் வேர் கடை அருகாமையில் உள்ள சந்தில் பாதை வசதியில்லை என்றும்
மெட்ரோ வாட்டர் பொதுக் குழாய் அமைத்து தரவேண்டுமென்றும் கோரிக்கை வைக்கப்பட்டது
அந்தப் பகுதியை ஆய்வு செய்து உரிய ஏற்பாடுகள் செய்யப்படுமென்று உறுதியளிக்கப்பட்டது

ஈ எஸ் ஐ மருத்துவமனை அருகில் உள்ள தெருவில் மின்விளக்குகள் அமைத்து தர வேண்டும் சென்னை நகரத்தில் இருந்தாலும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் கிராமத்தில் உள்ளது போல் உணர்வதாக கூறி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு வசிப்பவர் கோரிக்கை வைத்தார்

தான் தேர்தலில் வெற்றிபெற்றவுடன் முதலில் வந்து சந்தித்தது அந்த தெருவில் உள்ள மக்களை தான் அங்கு மின்கம்பங்கள் அமைக்க வேண்டுமென்றால் பாதையை அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென்று கூறினேன் ஆனால் இதுவரை அங்கு வசிப்பவர்கள் அதனை செய்யவில்லை அந்த இடம் தனியாரிடத்தில் இருப்பதால் தீர்வு காண இயலவில்லை என்று மாமன்ற உறுப்பினர் கூறினார்
கோரிக்கை வைத்தவரிடம் அங்கு வசிக்கும் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு கண்டால் தான் தீர்வு காண வழிபிறக்கும் என்று அறிவுறுத்தினார்

வரிபில் கார்டு கொடுக்கப்படுவதில்லை என்று தெரிவிக்கப்பட்டதிற்கு கார்டு வழங்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக
திரு. சுந்தரமூர்த்தி – வரி வசூலிப்பவர் உறுதி கூறினார் மேலும் ஏப்ரல் மாதம் 15 தேதிக்குள் வரிகளை செலுத்தி அபராத தொகை கட்டுவதை தவிர்த்திடுமாறு அறிவுறுத்தினார் வரிப்பணத்தில் தான் உங்கள் தேவைகளை பூர்த்தி செய்திட முடியும் எனவே வரிகளை பாக்கியின்றி கட்டிட வேண்டுகோள் விடுத்தார்
மாமன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று வீட்டு இலக்க எண்கள் சீரான முறையில் மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென உறுதியளித்தார்

கொசு மருந்து தொடர்ந்து அடித்து கொசுவை ஒழிக்க வேண்டுமென்று கோரிக்கை விடப்பட்டது
கொசு மருந்து தொடர்ந்து அடிக்கப்படுவதாகவும் ,கொசு மருந்து அடிக்க வருகையில் தங்களின் வீட்டில் உள்ள நீர் சேகரிப்பு கலன்களை ஆய்வு செய்ய யாரும் அனுமதிப்பதில்லை கொசுப்புழுக்கள் உருவாகி இருக்கிறதா இல்லையா என்பதனை எவ்வாறு உறுதி செய்து கொள்வது? கொசுபுழுக்கள் உருவாகி இருக்கிறதா என ஆய்வு செய்ய பணியளர்களை பொதுமக்கள் அனுமதிக்க வேண்டும் என்றும்
மழை நீர் வடிகால் வாய்க்கால் மேன் ஹோல்
மூடிகளின் மீது வாகனங்கள் நிறுத்தப்படுவதால் மூடிகளை திறந்து கொசு மருந்து அடிப்பது இயலாமல் போகிறது எனவே வாகனங்களை அப்படி நிறுத்தி வைக்காதீர்கள் என்று திருமதி R.சாருமதி – சுகாதார ஆய்வாளர் அறிவுறுத்தினார்

குப்பைகளை 57% பேர் மட்டுமே நேரடியாக தருகிறார்கள் அவையும் தரம் பிரிக்காமல் தரப்படுகிறது என்றும்,பொதுமக்கள் தரும் குப்பை கழிவுகளில் இருந்து உரம் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது என்றும்
குப்பைகளை தரம் பிரித்து தர வேண்டும் என்றும் திரு பாபு – திடக்கழிவு மேலாண்மை
உதவி செயற்பொறியாளர் கேட்டுக்கொண்டார்

அரசு ஆராம்ப சுகாதார மருத்துவமனையில் அடிப்படை வசதிகளும் மருந்துகளும் போதுமான அளவில் இருப்பதாகவும் மக்கள் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்று தங்கள பணத்தினை ஏன் விரையமாக்குகிறார்கள் என்று வினா எழுப்பி மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் சிறப்புகளை கூறி அதில் இணைவதற்கான வழிமுறைகளை கூறி
அனைவரும் அத்திட்டத்தால் பயன்பெற வேண்டுமென சிறப்பான விளக்கங்களை
மருத்துவர் திரு.மாதவன் விளக்கினார்

வட்ட கழக செயலாளர் திரு.க.வீ.சத்தீஷ் குமார் பாலமாக இருந்து கருத்துகளை மக்களுக்கும் அலுவலர்களுக்கும் பகிர்ந்தார்

இறுதியாக வார்டு கமிட்டி உறுப்பினர் மாயா (எ) ருத்ர மூர்த்தி நன்றி கூறி அரசு அலுவலர்களுக்கு பொன்னாடை அணிவித்து தன் அன்பினை பகிர்ந்து கொண்டார்

நிகழ்ச்சி முடிந்த பிறகு மாமன்ற உறுப்பினர் திரு.வீ கவிகணேசன் நிருபர்களின் கேள்விகளுக்கு விடை அளித்தார்
தெரு நாய் பிரச்சனைகளுக்கு தீர்வு காணப்படுமா?
தெரு நாய் பிரச்சனைக்கு தீர்வு காணப்படும் அவற்றின் இனப்பெருக்கத்தை தடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

தொடர்ந்து தூய்மை பணிக்கு முன்னுரிமை தருகிறீர்களே மாற்றம் இருக்கிறதா?
தற்போது முதல்வராக எங்களை
வழிநடத்தும் தலைவர் 25 ஆண்டுகளுக்கு முன் சென்னை மேயராக இருந்த போது தூய்மையான நகரம் என்பதனை முன் வைத்து பல் வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார் அவரின் அந்த கனவை லட்சியத்தை அடைந்திடவே உழைக்கிறேன் முன்பை விட மக்களின் ஒத்துழைப்பிலும் நல்ல முன்னேற்றம் இருக்கிறது

 

அன்புடன்
வீ.கவிகணேசன் M.A.,B.L., MC
12வது மாமன்ற உறுப்பினர்,
பெருநகர சென்னை மாநகராட்சி,
தலைமை கழக வழக்கறிஞர்,
திமுகழகம்
[4/8, 12:13] sekarreporter1: 💐

You may also like...