ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத தனியார் பள்ளி சமஸ்கிருத பண்டிட் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் தகுதி தேர்வு எழுதாத தனியார் பள்ளி சமஸ்கிருத பண்டிட் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்த உத்தரவை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரத்தில் உள்ள அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் சமஸ்கிருத பண்டிட் பணியிடத்தை நிரப்ப அரசு அனுமதியளித்தது.

இதையடுத்து, காலியிடம் குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் அறிவிப்பை வெளியிட்ட பள்ளி நிர்வாகம், பத்திரிகையில் விளம்பரம் வெளியிட்டு, நேர்முகத் தேர்வு நடத்தி, பிரசாந்த் என்பவரை நியமித்தது.

அவரது நியமனத்துக்கு ஒப்புதல் கோரி மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிக்கும் விண்ணப்பித்தது. ஆனால், ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதவில்லை எனக் கூறி, பிரசாந்தின் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்க மறுத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து பிரசாந்த் தாக்கல் செய்த வழக்கு நீதிபதி கிருஷ்ணகுமார் முன் விசாரணைக்கு வந்தபோது, சமஸ்கிருத பண்டிட்டுக்கு தகுதித் தேர்வில் இருந்து விலக்களிக்கவில்லை எனவும், தகுதித் தேர்வு எழுதாத மனுதாரர் நியமனத்துக்கு ஒப்புதல் வழங்கும்படி கோர எந்த உரிமையும் இல்லை எனவும் பள்ளிக்கல்வித் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி, கல்வி உரிமை சட்டப்படி ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதாத மனுதாரர் பணியில் நீடிக்க தகுதியில்லை என்பதால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி உத்தரவில் தலையிட முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...