ஆட்டோ மோதிய விபத்தில் பலியானவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் சாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

ஆட்டோ மோதிய விபத்தில் பலியானவருக்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை மோட்டார் சாகன விபத்து வழக்குகளை விசாரிக்கும் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை லிங்கி செட்டி தெருவைச் சேர்ந்த கஸ்துார்சந்த் ஜெயின் என்பவர், 2014 ஏப்ரலில், சென்ட்ரலில், தெற்கு ரயில்வே அலுவலகம் முன் பைக்கில் சென்று கொண்டிருந்த போது, அதிவேகமாக வந்த ஆட்டோ, மோதி விபத்துக்குள்ளானார்.

இதில் பலத்த காயமடைந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்,
கணவரின் இறப்புக்கு, 1 கோடி ரூபாய் இழப்பீடு கோரி கஸ்துார்சந்த் ஜெயினின் மனைவி புஷ்பா தேவி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சுரேஷ், ஆட்டோவை அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இயக்கியதே மனுதாரரின் கணவர் மரணத்துக்கு காரணம் என்பது தெளிவாகிறது எனக் கூறி, மனுதாரர் கோரிக்கையின்படி, ஒரு கோடி ரூபாயை ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன் இழப்பீடாக வழங்க ஐ.சி.ஐ.சி.ஐ., லம்பார்டு ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவிட்டார்.

இழப்பீடு தொகை 1கோடியே 32 லட்சமாக கணக்கிடப்பட்டு வரி பிடித்தம் போக ஒரு கோடி ரூபாய் 18 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் மனுதாரர் ஒரு கோடி ரூபாய் மட்டுமே இழப்பீடு கோரியுள்ளதால், அவர் கேட்ட ஒரு கோடி ரூபாயை மட்டுமே இழப்பீடாக வழங்க வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

You may also like...