உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர். என். வி. ரமணா அவர்கள்* *மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்* *திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்* *ஆகியோர்* சென்னை உயர்நீதிமன்ற கூட்ட அரங்கில்இன்று (23.04.2022) சனிக்கிழமை காலை 11.00 மணியளவில்,
*உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி மாண்புமிகு நீதியரசர். என். வி. ரமணா அவர்கள்*
*மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்*
*திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள்*
*ஆகியோர்*
சென்னை உயர்நீதிமன்ற கூட்ட அரங்கில் (23.04.2022) சனிக்கிழமை காலை 11.00 மணியளவில்,
(1) உயர்நீதிமன்ற வளாகத்தில் கட்டப்படவுள்ள 9 மாடி நிர்வாக கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார்கள்.
(2) நாமக்கல் மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பு கட்டடத்தை திறந்து வைக்கிறார்கள்.
(3) விழுப்புரம் மாவட்டம், சங்கராபுரத்தில் கட்டப்பட்டுள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் மற்றும் நீதிமன்ற அலுவலர்கள் குடியிருப்பு கட்டடத்தை திறந்து வைக்கிறார்கள்.
(4) சென்னையில் அமைக்கப்பட்டுள்ள வணிக நீதிமன்றங்களை திறந்து வைக்கிறார்கள்.
(5) உயிரிழந்த வழக்கறிஞர்களின் குடும்பத்தினருக்கு உதவிகள் வழங்குகிறார்கள்.
*குறிப்பு:*
(1) மேற்கண்ட நிகழ்ச்சி செய்தி தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு செய்வதற்கான Live Video Out சென்னை தலைமைச் செயலகத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(2) அரசு அங்கீகார அட்டை வழங்கப்பட்டுள்ள பத்திரிகையாளர்கள் (செய்தியாளர், புகைப்படக்காரர், ஒளிப்பதிவாளர்) மட்டும் அனுமதிக்கப்படுவார்கள்.
(3) பத்திரிகையாளர்கள் ஒரு மணி நேரத்திற்கு முன்பாக *சென்னை உயர்நீதிமன்ற ஆவின் நுழைவாயில் வழியாக* வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
(4) பத்திரிகையாளர்கள் அரசின் கொரோனா வழிகாட்டு நடைமுறைகள் (முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தல், உள்ளிட்ட) மற்றும் அனைத்து பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
– துணை இயக்குநர்,
செய்தி வெளியீட்டுப் பிரிவு,
தலைமைச் செயலகம்.