என் தந்தையும் தாயும்’ என்ற தலைப்பில், நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் எழுதிவரும் நூல், நூற்றாண்டு விழா நிறைவின் போது (MAY-June 2023) வெளியிடப்படும். உயர்திரு சுப்ரமணியன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, நூற்றாண்டு விழா மலர் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். பெரியவர் சுப்ரமணியத்துடன் நெருங்கிப் பழகியவர்களும் அவர் வாழ்வும் தொழிற்சங்கப் பணிகளும் பற்றி நன்கறிந்தவர்களும் உண்மையான விவரங்களைத் தந்துதவும்படி வேண்டிக்கொள்கிறோம். இது தொடர்பாகக் கருத்தளிக்க விரும்புவோர், முனைவர் இரா.இராமன் (முதல்வர், மாநிலக் கல்லூரி, சென்னை) மற்றும் முனைவர் சீ.இரகு (தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம். கைப்பேசி : 9585869999

PRESS RELEASE

இந்தியாவிலேயே முதன்முதலாகச் சென்னை மாகாணத்தில் வெள்ளுடை அலுவலர் (White Collared Employees Union) சங்கத்தை 1946இல் தொடங்கி நடத்திய முன்னோடி, பெரியவர் சுப்ரமணியன் (13.051923 – 07.08.2001) ஆவார். இந்திய நீதிமன்றங்களில் வழங்கப்படும் தீர்ப்புகளைப் பொதுமக்களிடமும் தொழிலாளர்களிடமும் மனித உரிமை ஆர்வலர்களிடமும் கொண்டுசேர்க்க முதல் முன்னோடி முயற்சியாக, ‘மெட்ராஸ் புத்தக நிறுவனம்’ (Madras Book Agency) தொடங்கியவர் அவர். இதன் மூலம், தொழிலாளர் நலன் சார்ந்த முக்கிய வழக்குகளின் சாரத்தை வழக்கறிஞர்களிடமும் நிர்வாகத்தினரிடமும் தொழிற்சங்கங்களிடமும் கொண்டுசேர்த்த பெருமைக்குரியவர் சுப்ரமணியன். தொழிலாளர் தோழரான அவரின் நூற்றாண்டுத் தொடக்கம் இது.
சட்டப் பிரசுர முன்னோடியான சுப்ரமணியன் அவர்கள், இன்றைய சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் எஸ்.வைத்தியநாதனின் தந்தையார் ஆவார். ‘என்தந்தையும் தாயும்’ என்ற தலைப்பில், நீதியரசர் எஸ்.வைத்தியநாதன் எழுதிவரும் நூல், நூற்றாண்டு விழா நிறைவின் போது (MAY-June 2023) வெளியிடப்படும்.
உயர்திரு சுப்ரமணியன் அவர்களின் நூற்றாண்டை முன்னிட்டு, நூற்றாண்டு விழா மலர் ஒன்றைக் கொண்டுவரத் திட்டமிட்டுள்ளோம். பெரியவர் சுப்ரமணியத்துடன் நெருங்கிப் பழகியவர்களும் அவர் வாழ்வும் தொழிற்சங்கப் பணிகளும் பற்றி நன்கறிந்தவர்களும் உண்மையான விவரங்களைத் தந்துதவும்படி வேண்டிக்கொள்கிறோம். இது தொடர்பாகக் கருத்தளிக்க விரும்புவோர், முனைவர் இரா.இராமன் (முதல்வர், மாநிலக் கல்லூரி, சென்னை) மற்றும் முனைவர் சீ.இரகு (தமிழ்ப் பேராசிரியர், மாநிலக் கல்லூரி, சென்னை) ஆகியோரைத் தொடர்புகொள்ளலாம்.
கைப்பேசி : 9585869999

You may also like...