எளியவர் நிழலில் மனம் மகிழும் இறைவன் written by ஆன்மீக எமுத்தாளர் வக்கீல் Hemalatha

👫🙏எளியவர் நிழலில் மனம் மகிழும் இறைவன் !! 🙏👫
🏯🔔தஞ்சைப் பெருவுடையார் கோவில் அல்லது தஞ்சைப் பிரகதீஸ்வரர் கோயில் என அழைக்கப்படும் தஞ்சைப் பெரியகோவில் , தமிழரின் பாரம்பரியச் சின்னமாக மதிக்கப்படுகிறது !! கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக தமிழ் மண்ணின் பெருமையைப் பறைசாற்றியபடி உயர்ந்து நின்று கொண்டுள்ளது !!
🏯🔔கிபி 10 ம் நூற்றாண்டில் சோழப் பேரரசு புகழ்பெற்ற நிலையிலிருந்தபோது இராஜராஜ சோழனால் கட்டப்பட்டது இந்த ஆலயம் !! ஆரம்பத்தில் இராஜராஜேஸ்வரம் என்றும் , பின்நாட்களில் தஞ்சையை நாயக்கர்கள் ஆண்டகாலத்தில் தஞ்சைப் பெருவுடையார் கோயில் என்றும் அழைக்கப்பட்டது !! கிபி பதினேழு மற்றும் பதினெட்டாம் நூற்றாண்டுகளில் மராட்டிய மன்னர்களால் ஆளப்பட்டபோது பிரகதீஸ்வரம் என்று சொல்லப்பட்டது !!
🏯🔔இந்தப் பிரம்மாண்டமான கோவிலை கட்டி முடிக்க சுமார் ஏழு ஆண்டுகள் ஆனதாக சொல்லப்படுகிறது !! இரண்டு அல்லது மூன்று தளங்கள் மட்டும் உள்ள கோயில்கள் கட்டப்பட்டு வந்த காலத்தில் , கற்களே கிடைக்காத , காவிரி சமவெளிப் பகுதியில் 15 தளங்கள் கொண்ட சுமார் 60 மீட்டர் உயரமான ஒரு கற்கோயில் அமைக்கப்பட்டது பெரும் சாதனையாகும் !! அதுமட்டுமல்லாமல் கல்வெட்டுகள் , சிற்பங்கள் , ஓவியங்கள் , வழிபாட்டுக்கான செப்புத் திருமேனிகள் என்று பல்வேறு புதிய அம்சங்களையும் கோவிலில் அமைத்து பல புதுமைகள் செய்யப்பட்டது !!
🏯🔔இந்தக் கோவிலைப் பற்றி , உணர்வுப்பூர்வமான பல்வேறு வகையான உண்மை சார்ந்த கதைகள் உலவி வருகின்றன !! அவற்றில் ஒன்றை இங்கே காணலாம் !!
🏯🔔பெரிய கோவிலை நிர்மாணிக்க ராஜராஜன் முடிவு செய்து அதற்கானப் பணிகள் தொடங்கப்பட்டது !! பல்வேறு ஸ்தபதிகள் தலைமையில் , நூற்றுக்கணக்கானச் சிற்பிகள் உள்ளிட்ட பணியாளர்கள் கோவில் கட்டும் பணியில் உழைத்துக் கொண்டிருந்தார்கள் !! அது தவிர பொது மக்களும் அவர்கள் பங்கிற்கு பொன்னும் பொருளும் கோவில் திருப்பணிக்கு கொடுத்து உதவினார்கள் !!
🏯🔔சரித்திரப் புகழ் பெறும் வகையில் கட்டப்பட வேண்டும் என்ற லட்சிய நோக்கில் , அதனைக் கட்டமைக்க துல்லியமாகத் திட்டமிடப்பட்டுப் பணிகள் நடந்து வந்தன !!
🏯🔔அந்த ஊரில் துணைக்கு யாரும் இல்லாத “அழகி” என்ற பெயர் கொண்ட பாட்டி ஒருத்தியும் இருந்தாள் ! அவருக்கும் கோவில் பணியில் பங்கு கொள்ள ஆவல் !! சிவாலயத் திருப்பணிக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்ய வேண்டும் என்று மிகவும் விரும்பினார் !!
🏯🔔பொருள் ஏதும் அவரிடம் இல்லாததால் , என்ன செய்யலாம் என்று தீவிரமாக சிந்தனை செய்தவரின் மனதில் , ஒரு யோசனை உதித்தது !! கோவில் கட்டும் பணியில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு சிவ கைங்கரியமாக நீர்மோர் கொடுக்க முடிவு செய்தாள் !! ஆலயம் கட்டும் பணியில் இருப்பவர்களின் தாகம் தீர்ப்பதும் , ஒருவகையான சிவத்தொண்டு என முடிவு செய்து , பானையில் மோர் எடுத்துக்கொண்டு , கோவில் பணியில் இருக்கும் சிற்பிகளுக்கு தினமும் கொடுத்து வந்தாள் !!
🏯🔔வெயில் சமயத்தில் , கருவேப்பிலை , இஞ்சி கலந்த நீர் மோர் பருகும் சிற்பிகள் மகிழ்ச்சி அடைந்தனர் !! தினமும் அவனது வருகையை எதிர் நோக்கி இருக்கும்படி , அவளது உதவி அமைந்துவிட்டது !! அவளும் அவர்கள் மத்தியில் பழக்கமான ஒரு நபராக ஆகிவிட்டாள் !!
🏯🔔காலப்போக்கில் கோவில் கட்டும் வேலைகள் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில் , கோபுர விதானத்தில் , கருவறைக்கு மேல் கல் பதிக்க வேண்டிய பணி மீதமிருந்தது !! சரியான ஒரு கல்லைத் தேடி பல நாட்கள் அழைந்தார் தலைமைச் சிற்பி !! நல்ல நீரோட்டமுள்ள , ஒற்றைக் கல்லாக இருக்க வேண்டும் என்ற நிலையில் தேடும் பணிகள் வேகமாக நடந்தன !!
🏯🔔ஒருநாள் வழக்கப்படி மோர் கொடுக்க வந்த பாட்டியின் முகத்தில் உள்ள கவலையைக் கவனித்த தலைமைச் சிற்பி , அதுபற்றி அவரிடம் விசாரித்தார் !! கோவில் பணிகள் முடிவடைய உள்ள நிலையில் , அவளால் எதுவும் தர இயலாத நிலையை எண்ணி , வருத்தம் அடைவதாகப் பாட்டி கூறினார் !!
🏯🔔சிற்பியும் அவளைத் தேற்றுவது போல பேசியது கேட்டு , பாட்டி ஒரு வேண்டுகோளை அவருக்கு வைத்தாள் !! அதாவது அவளது வீட்டுக்கு முன்பாக கிடக்கும் ஒரு பெரிய பாறையை பயன்படுத்திக் கொள்ள , தலைமைச் சிற்பியைக் கேட்டுக் கொண்டாள் !!
🏯🔔வயதில் பெரியவர் என்ற கருத்தில் , சிற்பி அழகிப் பாட்டி வீட்டுக்குச் சென்று அந்தப் பாறையை பார்த்தார் !! கோபுர விதானத்தின் மீது அமைக்கப் பொருத்தமான கல் போன்றே அவருக்குத் தோன்றியது !! சோதனை செய்ததில் , அந்தப் பாறை பொருத்தமானது என்று அறிந்து , கச்சிதமாக அதைச் செதுக்கி , கோபுர விதானத்தில் அமைத்துவிட்டார் !! பாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை !!
🏯🔔குடமுழுக்கு நாள் நெருங்கிய நிலையில் , ராஜராஜன் தனது பரிவாரங்களுடன் வந்து கோவிலை சுற்றிப் பார்த்தார் !! இத்தனைச் சிறப்பு அம்சங்களுடன் சிவபெருமானுக்கு கோவில்கள் இருக்க வாய்ப்பு இல்லை என்ற பெருமையில் பூரிப்படைந்தார் !!
🏯🔔அன்று இரவு உறக்கத்தில் இருந்த ராஜராஜன் கனவில் , சிவபெருமான் தோன்றி , ” பெரிய கோவிலில் , அழகி என்கின்ற மூதாட்டி தயவில் அமைந்த நிழலில் தங்குவது , எனக்கு மிக்க மகிழ்ச்சி ” என்று கூறினார் !!
🏯🔔துயிலில் இருந்து திடுக்கிட்டு விழித்த மன்னன் , ” பிரம்மாண்டமான பெரியகோவிலைக் கட்டிய என்னிடம் , அழகி என்கிற பாட்டியின் நிழலில் தங்குவது இறைவனுக்கு மகிழ்ச்சி என்று சொல்லியதன் பின்னணி என்ன ? என்கிற குழப்பத்தில் தவித்தான் !!
🏯🔔மறு நாள் , அமைச்சரை அனுப்பி , அழகி என்ற பாட்டி பற்றி விசாரித்து வரச் சொன்னான் !! அமைச்சரும் விசாரித்துத் தகவல் தந்ததும் , அவளைத் தேடி குடிசைக்கே இராஜராஜன் சென்றார் !!
🏯🔔” அம்மா , சிவபெருமானுக்கு நீங்கள் எப்படிப்பட்ட தொண்டு செய்தீர்கள் என்பதை நான் அறியேன் !! ஆனால் நீங்கள் தந்த நிழலில் மகிழ்ச்சியாக இருப்பதாக இறைவன் என் கனவில் தெரிவித்தார் !! நீங்கள் என்ன செய்தீர்கள் என அறியலாமா ” என்று கேட்டார் !!
🏯🔔தினமும் கோவில் திருப்பணி புரியும் சிற்பிகளுக்கு , நீர் மோர் கொடுத்து வந்ததையும் , கோபுர விதானத்தில் பதிக்க , கல் ஒன்றை கொடுத்ததையும் கூறினாள் !! ராஜராஜசோழன் அந்த பாட்டியை விடவும் மகிழ்ச்சி அடைந்தார் !! இறைவன் எளியவர்களுக்கெல்லாம் எளியவன் என்பதையும் , அன்பால் மட்டுமே அவனைக் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் உணர்ந்து அந்தப் பாட்டியை வணங்கினார் !!
🏯🔔இந்தச் சம்பவம் தஞ்சை பெரிய கோவில் கட்டுமானப் பணிகளின் போது , நடந்த நிகழ்வாகச் சொல்லப்படுகிறது !! இன்று தஞ்சை நகராட்சி அலுவலகம் உள்ளப் பகுதியில் , அழகிப் பாட்டி வசித்த குடிசை அமைந்து இருந்ததாக சொல்லப்படுகிறது !! ” அழகிக் குளம் ” என்கிற ஒரு இடமும் தஞ்சாவூரில் இருப்பது குறிப்பிடத்தக்கது !!
🏯🔔ஆச்சரியப்படத்தக்க , பிரம்மாண்டமான வரலாற்று அடையாளங்கள் ஒவ்வொன்றின் பின்னணியிலும் , மேற்கண்ட நிகழ்வு போன்ற உணர்வு ரீதியான , தியாக வரலாறு ஏதாவது ஒன்று வெளியில் தெரியாமல் இருக்கிறது !!
🏯🙏🔔👫⛲🦍🐘⛲👫🔔🙏🏯

You may also like...