கூட்டுறவு சங்க தலைவர்களின் செக் பவர் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை!*

*கூட்டுறவு சங்க தலைவர்களின் செக் பவர் தொடர்பாக தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு சென்னை ஐகோர்ட் இடைக்கால தடை!*

தமிழகமெங்குமுள்ள கூட்டுறவுசங்க தலைவர்கள் சங்க அன்றாட நடவடிக்கைகள் மற்றும் பொதுமக்களுக்கு கடன் வழங்குவது தொடர்பாக காசோலைகளில் கையொப்பமிட்டு வழங்கும் அதிகாரத்தை ரத்து செய்து தமிழக அரசு சமீபத்தில் உத்தரவு ஒன்றை பிறபித்தது.

இதுதொடர்பாக கூட்டுறவு சங்க பதிவாளர் தமிழகமெங்கும் உள்ள கூட்டுறவு சங்க தலைவர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார்.

இந்த சுற்றறிக்கை சட்டவிரோதமானது, கூட்டுறவு தன்னாட்சி விதிகளுக்கு எதிரானது என்று கூறி கோவை மாவட்டம் வெங்கட்டாபுரம் கூட்டுறவு கடன் சங்க தலைவர் செந்தில்குமார் சென்னை ஐகோர்ட் டில்வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பாக விசாரணைக்கு வந்தது.மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர்கள் அரவிந்த் பாண்டியன், இன்பதுரை, எல்.பி.சண்முகசுந்தரம் ஆகியோர் ஆஜராகினர்.

வழக்கு விசாரணையின்போது தமிழக அரசின் இந்த சட்டம் தவறானது. கூட்டுறவு சங்க சட்டம் பிரிவு 84 ன்படி இந்த சுற்றறிக்கை அனுப்பபட்டுள்ளது. ஆனால் 84 வது பிரிவின்படி அவ்வாறு தடை செய்து சுற்றறிக்கை அனுப்ப அரசுக்கு அதிகாரமில்லை என்று மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டதை தொடர்ந்து கூட்டுறவு சங்க தலைவர்கள் காசோலையை கையாள்வதற்கு தடைவிதித்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு நீதியரசர் ஜி.ஆர்.சுவாமிநாதன் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

You may also like...