கொரோனா தொற்று எனும் புயலில் சிக்கியவர்களை காக்க பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பாராட்டு தெரிவித்துள்ளார்.tamil letter Cj mhc
கொரோனா தொற்று எனும் புயலில் சிக்கியவர்களை காக்க பாடுபடும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல் துறையினர் உள்ளிட்டோருக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில், கொரோனாவுக்கு எதிராக தங்கள் வாழ்வை அர்ப்பணித்து செயல்படும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் துறையினர், நமது நினைவில் தியாகிகளாக முன் நிற்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
மனித வாழ்வை பாதுகாப்பதை கடமையாகக் கொண்டு செயல்படும் அவர்களின் தியாகத்தை நாம் மறந்து விடக் கூடாது என தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
தொடுவானம் நம் முழங்கையில் இல்லை என்பதை இயற்கை உணர்த்தியுள்ளது. மனித குலத்துக்கு உதவி செய்பவர்களுக்கு கடவுள் உதவி செய்வார் என்ற நம்பிக்கை, மனித முயற்சிகளை முன்னெச்சரிக்கை உணர்வு என ஒப்புக் கொள்கிறது எனத் தெரிவித்துள்ளார்.
இயற்கையின் கோபத்தால் இழந்ததை மீட்டெடுக்கும் மனித சாதனைகள் பல நேரங்களில் நிகழ்ந்திருக்கின்றன எனச் சுட்டிக் காட்டிய தலைமை நீதிபதி, இது தொடுவானம் எல்லையற்றதல்ல என்ற நம்பிக்கையை நம்முள் விதைக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.
சுதந்திரத்துக்குப் பின், நம் குடிமக்களின் வாழ்க்கை தரம் வளர்ந்து வருவதை புள்ளி விவரங்கள் காட்டினாலும், இன்னும் லட்சக்கணக்கான மக்கள் சமூக பாதுகாப்பு இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளனர் எனக் குறிப்பிட்ட அவர், இந்த இடைவெளியை சரி செய்வதற்கு அரசுகளும் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.
மிகச்சிறந்த ஆக்கப்பூர்வமான பணிகள் நமது பலத்தால் மட்டும் மேற்கொள்ளப்படவில்லை; நமது விடாமுயற்சியும் தான் அதற்கு காரணம் என பெருமை தெரிவித்த தலைமை நீதிபதி, உண்மையான முயற்சி விதைகள் தூவப்பட்டால் வெற்றிக்கனியை பறிக்க முடியும் எனவும், கொரோனா பேரலையில் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ளவும், மனித குலத்தை பாதுகாக்க தீவிர முயற்சிகளை எடுக்கும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் காவல் துறையினருடன் தோளோடு தோள் கொடுப்போம் எனக் குறிப்பிட்டுள்ளார்.