கோவில் விழாவுக்கு அனுமதி கேட்டு whapp மூலம் இன்று GRSj விசாரணை

[5/15, 11:03] Sekarreporter: [5/15, 11:03] Sekarreporter: Sir…..
In the above matter,Today hearing at 12 O clock before Honble Justice GR Swaminathan through Wattsapp call hearing Advocate General and State Government pleader P.Muthukumar is appearing for state
[5/15, 11:03] Sekarreporter: Temple case
[5/15, 11:06] Sekarreporter: தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தை தொடர்ந்து தர்மபுரி பாப்பாரபட்டி வரதராஜ சுவாமி கோவில் தேர் திருவிழாவை நிறுத்தும்படி பிறப்பித்த உத்தரவை எதிர்த்த வழக்கை அவசர வழக்காக உயர் நீதிமன்றம் விசாரிக்கிறது.

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி அபிஷ்ட வரதராஜ சுவாமி கோவில் பரம்பரை அறங்காவலர் பி.ஆர்.சீனிவாசன் என்பவர் தாக்கல் செய்த மனுவில், கடந்த 80 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வரும் கோவில் தேர்திருவிழா, நாளை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 22 அடி உயரமும், 8 அடி அகலமும் கொண்ட தேர் ஊர்வலம் வர எந்த இடையூறும் இல்லை எனத் தெரிவித்துள்ளார்.

தேர் திருவிழாவுக்காக வருவஅய் துறை, மின்சார வாரியம், உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெற்றுள்ள நிலையில், தஞ்சாவூர் தேர் திருவிழா விபத்தை தொடர்ந்து, தேர் வலம் வரும் தெருக்களை ஆய்வு செய்த அறநிலைய துறை ஆய்வாளர், தேர் திருவிழாவை நிறுத்தும்படி மே 13ம் தேதி அறநிலைய துறை உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தேர் வலம் வரும் தெருக்களில் மின்சார கம்பிகள், தேரின் உயரத்தை விட உயரமாகவே உள்ளதாகவும், தேர் திருவிழாவை நிறுத்தினால் பக்தர்களின் மத உணர்வுகள் பாதிக்கப்படும் எனவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க தயாராக உள்ளதால், தேர் திருவிழாவை நிறுத்தும்படி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக வாட்ஸ் அப் அழைப்பு மூலமாக நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பகல் 12 மணியளவில் விசாரிக்க உள்ளார்.

You may also like...