சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரி வழக்கை த்ள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் உள்ள சட்டவிரோத ரிசார்ட்களை அகற்றக் கோரி வழக்கை த்ள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சத்தியமங்கலம் வனப்பகுதியில் புலிகள் நடமாட்டம் அதிகமுள்ள 1,411 சதுர கிலோ மீட்டர் பரப்பை புலிகள் சரணாலயமாக 2013ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. தமிழகத்தில் நான்காவது புலிகள் சரணாலயமான சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோத ரிசார்ட்கள் செயல்படுவதாக கூறி, அவற்றை அகற்ற உத்தரவிட கோரி விலங்குகள் நல ஆர்வலரும், வழக்கறிஞருமான சொக்கலிங்கம் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் 51 ரிசார்ட்கள் உள்ளதாக, தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அனுப்பிய விண்ணப்பத்துக்கு, சத்தியமங்கலம் தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் கள இயக்குனர் பதிலளித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசிய வன விலங்குகள் வாரியத்திடமோ, மலைப்பகுதி பாதுகாப்பு ஆணையத்திடமோ ஒப்புதல் பெறாமல், இந்த ரிசார்ட்கள் சட்டவிரோதமாக செயல்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.

வன உயிரினங்களுக்கும், சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும் இந்த ரிசார்ட்களை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் வனத்துறை அதிகாரிகள் உள்ளதாகவும் புகார் தெரிவித்துள்ளார்.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தில் சட்டவிரோதமாக செயல்படும் அனைத்து ரிசார்ட்களையும் சீல் வைக்க கோரியுள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு, ரிசார்ட்களை எதிர்மனுதாரர்களாக சேர்க்கவில்லை எனவும், ரிசார்ட்களை சேர்க்காமல் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது எனக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

You may also like...