சாலையில் நடந்து சென்ற பார்வை மாற்று திறனாளியை தாக்கிய வழக்கில் கைதான காவல்துறை எழுத்தரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சாலையில் நடந்து சென்ற பார்வை மாற்று திறனாளியை தாக்கிய வழக்கில் கைதான காவல்துறை எழுத்தரின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் எழுத்தராக பணிபுரியும் தினேஷ்குமார்
ஏப்ரல் 15ஆம் தேதி திருவல்லிக்கேணி அருகே பார்வை மாற்றுத் திறனாளியான விஜயகுமார் என்பவரை வழிமறித்து அடித்து, ஊன்றுகோலை உடைத்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுதொடர்பாக திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் விஜயகுமார் அளித்த புகாரில் ரைட்டர் தினேஷ்குமார் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.

ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் தினேஷ்குமார் தாக்கல் செய்த மனு நீதிபதி எஸ்.அல்லி முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை தரப்பில் பெருநகர அரசு குற்றவியல் வழக்கறிஞர் தேவராஜன் ஆஜராகி ரைட்டர் தினேஷ்குமார் மீது ஏற்கனவே ஒரு வழக்கு உள்ளதாகவும், குடிபோதையில் மாற்றுத்திறனாளியை தாக்கியுள்ளதாலும், விசாரணை இன்னும் நிறைவடையவில்லை என்பதாலும் ஜாமின் வழங்கக்கூடாது என கடும் ஆட்சேபனை தெரிவித்தார்.

இதை ஏற்ற நீதிபதி அல்லி, ஜாமின் கோரிய ரைட்டர் தினேஷ்குமார் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

You may also like...