சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக எட்டு பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்திற்கு புதிதாக எட்டு பேரை நீதிபதிகளாக நியமிக்க மத்திய அரசுக்கு
உச்ச நீதிமன்ற கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மொத்த நீதிபதிகளுக்கான இடம் 25 ஆகும். இதில், நீதிபதிகள் சிலர் ஓய்வு பெற்று விட்ட நிலையில் தற்போதைய நீதிபதிகளின் எண்ணிக்கை 52 ஆக உள்ளது. காலியாக உள்ள நீதிபதிகளின் இடங்களை நிரப்பும் வகையில் 18 பேரின் பெயர்களை உச்ச நீதிமன்றம் தேர்வு குழுவிற்கு உயர் நீதிமன்ற தேர்வு குழு அனுப்பி இருந்தது.

இது தொடர்பாக கடந்த 17ஆம் தேதி உச்ச நீதிமன்ற கொலீஜியம் கூடி ஆலோசனை நடத்தியது. அதன்படி சென்னை உயர்நீதிமன்றத்திற்கு எட்டு பேரை புதிய நீதிபதிகளாக மத்திய அரசுக்கு கொலிஜியம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக உள்ள பி.லட்சுமி நாராயணன், எல் சி விக்டோரியா கௌரி, எஸ்பிபி பாலாஜி, ஆர் நீலகண்டன்,
கே.கே ராமகிருஷ்ணன் ஆகியோரும் மாவட்ட நீதிபதிகளாக உள்ள வடமாலை, கலைமதி மற்றும் திலகவதி ஆகியோரின் பெயர்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

You may also like...