சேவை குறைபாட்டு தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்க்கு டைட்டன் நிறுவனம் 30 ஆயிரம் இழப்பீடு வழக்கு சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவு. சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எல்.பி.சண்முக சுந்தரம் வழக்கு

[12/18, 07:03] Sekarreporter: https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/titan-company-watches-technical-problem-chennai-consumer-court-approach
[12/18, 07:05] Sekarreporter: சேவை குறைபாட்டு தொடர்பான வழக்கில் பாதிக்கப்பட்டவர்க்கு டைட்டன் நிறுவனம் 30 ஆயிரம் இழப்பீடு வழக்கு சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் உத்தரவு.
சென்னையை சேர்ந்த வழக்கறிஞர் எல்.பி.சண்முக சுந்தரம் சென்னை மாவட்ட நுகர்வோர் குறை தீர்வு மன்றத்தில் கடந்த 2015 ஆம் ஆண்டு தாக்கல் செய்த மனுவில், கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் சென்னை வடபழனியில் உள்ள டைட்டன் கை கடிகார நிறுவனத்தில் 7 ஆயிரத்து 195 ரூபாய் மதிப்பில் கடிகாரம் வாங்கினேன். மூன்று மாதத்தில் அது பழுது ஏற்பட்டாது. உடனடியாக அதே ஆண்டு டிசம்பர் மாதம் டைட்டன் நிறுவனத்தின் கடையில் கொடுத்து பழுது குறித்து தெரிவித்தேன். ஆனால் உரிய முறையில் அவர்கள் பதில் அளிக்காமல் இழுத்து அடிக்கும் வகையில் செயல்பட்டு வந்தனர். உத்தரவாதம் இருந்தும் தொடர்ந்து டைட்டன் நிறுவனம் பழுதை சரி செய்யவே அல்லது புதிய கடிகாரம் மாற்றி தரமாலும் இலுத்தடித்து வந்தனர். எனவே சேவை குறைபாட்டின் ஈடுபட்ட டைட்டன் நிறுவனத்திடம் இருந்து இழப்பீடு வழங்கவும் கடிகாரத்தை மாற்றி தர உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த சென்னை மாவட்ட நுகர்வோர் குறைதீர்ப்பு மன்றம், ஆவணங்கள் அடிப்படையில் டைட்டன் கடிகார நிறுவனம் சேவை குறைபாட்டில் ஈடுபட்டுள்ளது. எனவே பாதிக்கப்பட்ட வழக்கறிஞர் சண்முகசுந்தரம் – த்திற்கு 30 ஆயிரம் இழப்பீடு வழக்க வேண்டும். மேலும் மனுதார் வாங்கிய கடிகாரத்தை போன்ற அதே மாடல் கடிகாரம் ஒரு மாதத்தில் வழங்க வேண்டும். மேலும் வழக்கு செலவாக 5 ஆயிரம் அளிக்கவும் டைட்டன் நிறுவனத்திற்கு உத்தரவிட்டது.

You may also like...