தமிழ்நாட்டில் மருத்துவர் சமூகத்திற்கு (MBC) பொது இடுகாடு உரிமை மறுப்புக்கு எதிராக ஜனநாயக வழக்கறிஞர்

[1/20, 20:48] Sekarreporter 1: https://youtu.be/46eFb_6FAYc
[1/20, 21:53] Sekarreporter 1: *தமிழ்நாட்டில் மருத்துவர் சமூகத்திற்கு (MBC) பொது இடுகாடு உரிமை மறுப்புக்கு எதிராக ஜனநாயக வழக்கறிஞர் சங்கDAAஆதரவோடு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட்மனுஎண் 755/2022வழக்கு தாக்கல் செய்து,இன்று20.1.2022 விசாரணைக்கு வந்தது.*

தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டத்தில் கந்தர்வகோட்டை தாலுகாவில் அமைந்துள்ள வீரடிப்பட்டி ஊராட்சியில் ,1962 முதல் மருத்துவர் சமூகத்தை (MBCபிரிவு) சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 42 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். அந்தப்பகுதியில் உடையார்,செட்டியார்,கள்ளர், முத்துராஜா, ஆச்சாரி,கோனார், ஆதிதிராவிடர் ,மருத்துவர் சமூகத்தை சேர்ந்த பொதுமக்கள் வசித்து வருகின்றனர். ஆனால் மருத்துவர் சமூகம் சார்ந்த பொது மக்களுக்கு 42 ஆண்டுகளாக பொது இடுகாடு உரிமை மறுக்கப்பட்டு வருகிறது. இவர்கள் பொது இடுகாட்டில் எரிப்பதற்கும், புதைப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. இறந்தவர்கள் உடலை இவர்களுடைய பட்டா நிலங்களில் எரிப்பதற்கும், புதைப்பதற்கு கட்டாயப்படுத்தப்பட்டனர். தொடர்ந்து பலமுறை அரசு அதிகாரிகளை அணுகியும் அவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் இருந்தது. தொடர்ந்து அரசாங்கம் அமைதி பேச்சுவார்த்தைகள் நடத்திய பிறகும் இவர்களுக்கு பொது இடுகாடு என்பது மறுக்கப்பட்டு வந்தது. இந்தப் பின்னணியில் மருத்துவ சமூகத்தை சேர்ந்த பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட v.திருவேங்கடம் அவர்கள் ,*ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநில தலைவர் வழக்கறிஞர் கு.பாரதி* அவர்களை அணுகினார். அதன் பின்பு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ரிட் மனு எண் 755/2022 வழக்கை வழக்கறிஞர்கள் *K.பாரதி, ரமேஷ் உமாபதி, S.விஜய்,* ஆகியோர் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் ஜனநாயக வழக்கறிஞர் சங்க சட்ட ஆலோசகரும், மூத்த வழக்கறிஞருமான *K.M.ரமேஷ்* அவர்கள் மாண்புமிகு நீதிபதி *C.V.கார்த்திகேயன்* முன்பு ஆஜரானார். விசாரணையின்போது பொது இடுகாடு உரிமை மறுப்பு என்பது அரசியலமைப்பு உரிமைக்கு எதிரானது என வாதிட்டார். மேலும் சென்னை உயர் நீதிமன்ற மாண்புமிகு நீதிபதிகள் மகாதேவன், ஆனந்த் வெங்கடேஷ், S.M.சுப்ரமணியம், மற்றும் முன்னாள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பேனர்ஜி, மற்றும் செந்தில்குமார் அமர்வு பொது இடுகாடு சம்பந்தப்பட்ட வழக்குகளில் உத்தரவிட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டினார். அதன் பின்பு ,சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை மாண்புமிகு நீதிபதி C.V.கார்த்திகேயன் அவர்கள் ,இந்த வழக்கை பொதுநல வழக்காக இரு நீதிபதிகள் அமர்விற்கு மாற்ற பதிவாளர் நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். தமிழ்நாட்டில் இறப்பிற்குப் பின்பு ,கவுரவத்தோடு எரிப்பது, புதைப்பது என்பது அரசியலமைப்புச் சட்டம் சரத்து 21-ன் உயிர் வாழும் உரிமைக்கு கீழ் வரும் என வாதிடபட்டுள்ளது. நீதி கிடைக்கும் வரை சட்டப் போராட்டம் தொடரும். இவ்வழக்கில் ஜனநாயக வழக்கறிஞர் சங்கம் வழக்கு செலவை ஏற்றுக்கொண்டு ,கட்டணமில்லாமல் வழக்கு நடத்தியுள்ளது. மேலும் மூத்த வழக்கறிஞர் K.M.ரமேஷ் அவர்கள் எவ்வித கட்டணமும் இன்றி வழக்கை நடத்தினார்.

செய்தி வெளியீடு. ஜெ.மோகன்ராஜ்,
மாநில துணை பொதுசெயலாளர், ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்.
8778953332.

You may also like...