தலைமை நீதிபதி சந்திரசூட் ‘அடையாளம், தனிமனிதன், அரசு : விடுதலையின் புதிய பாதை’ என்ற தலைப்பில் பேசினார்.

தலைமை நீதிபதி சந்திரசூட் ‘அடையாளம், தனிமனிதன், அரசு : விடுதலையின் புதிய பாதை’ என்ற தலைப்பில் பேசினார்.

அவர் பேசுகையில், “இந்திய சாதிய அமைப்பின் ஏற்றத்தாழ்வுகள் வரலாற்று ரீதியாக மட்டுமல்லாமல், இன்றைய சிக்கலான யாதார்த்தங்களிலும் ஆழமாக வேரூன்றியுள்ளதாகவும், உட்சிக்கல்கள் கொண்ட சட்டமும் சமூகத்தில் இந்த வேற்றுமையைத் தொடர்ந்து நிலைநிறுத்துவதாகவும் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்
உள்ளூர் மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது
50 சதவீத இடஒதுக்கீட்டை 65 சதவீதமாக உயர்த்தும் பீகார் அரசு!
மகளிர் இட ஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவோம்

ஒவ்வொரு சாதியக் குழுக்களும் சாதிய அமைப்பு முறையின் படியே பொருளாதார வாய்ப்பு நலன்களை பெற்று விரிவாக்கம் செய்வதாக தெரிவித்தார். பொருளாதார நலன்களில் சாதி அமைப்பின் தாக்கம் தொடர்வதாகவும் தெரிவித்தார்.

மேலும், பெரும்பான்மை (popular sovereignty) என்பது ஒற்றைப்படையான, ஒட்டுமொத்தலுக்கான கருத்தாக்கம் அல்ல என்றும்,வெகுசன அரசியலின் அடிநாதமாக பலதரப்பு தன்மைகளை உள்ளடக்கும் விதம் நமது பார்வைகளை விரிவுபடுத்த வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், அவர் கூறுகையில், ” விடுதலை (லிபர்டி) என்றால் குறைந்த பட்ச அரசு தலையீடு என்ற வரலாற்று புரிதலில் உள்ள போதாத்தன்மையை நாம் புரிந்து கொள்வது அவசியமென்று கூறினார். இதற்கு மேலும் விளக்கமளித்த அவர், ” பழங்குடியினர் வாழ்க்கையில் சுதந்திரம் என்பதற்கான அர்த்தம் முற்றிலும் மாறுபட்டதாக இருப்பதாகவும் தெரிவித்தார். பழங்குடியின மக்கள் தங்களது பிராந்திய வெளியை உறுதி செய்வதைத் தலையாயக் கடமையாகக் கொண்டுள்ளதாகவும், ஆபத்தான சூழ்நிலையில் தங்களின் எதிர்ப்புக் குரலையும், எதிரிகளை முறியடிக்கும் வல்லமையையும் தான் உண்மையான சுதந்திரமாக கருதுவதாகவும் தெரிவித்தார்.

நமது அறிவுலங்கள் தனியுலகமாக, நடுநிலையாகவே இயங்கவில்லை என்றும், அது அதிகாரத் தளத்தில் ஊடுருவி நின்று செயல்படுவதாகவும் தெரிவித்தார். இத்தகைய ஒரு சூழலில், விடுதலை, சுதந்திரம் பற்றிய மாற்று பார்வையை நாம் உருவாக்கிட வேண்டிம் என்றும் கூறினார்

You may also like...