திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு 1.5 லட்சம் கட்சி சார்பில் வழங்கியுள்ளதாகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் வழங்கபட்டுள்ளது என தெரிவித்தார்.

விதிகளை பின்பற்றாமல் கட்சி கொடி கம்பம் வைத்த போது மின்சாரம் தாக்கி பலியானவர்க்கு கொடுத்த இழப்பீடு போதுமா? என சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி.

கடந்த 2021 ஆம் ஆண்டு விழுப்புரத்தில் முன்னாள் எம் எல் ஏ இல்லத் திருமணத்திற்கு அமைச்சர் பொன்முடியை வரவேற்று தி.மு.கவினர் பேனர் வைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்ட போது 12 வயது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி பலியானார்.

கடந்த 2021 ஆகஸ்டில் நடந்த இந்த சம்பவத்தை குறிப்பிட்டு விழுப்புரத்தில் சட்டவிரோதமாக பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் வைக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட கோரியும், பலியான சிறுவனுக்கு உரிய இழப்பீட்டை வழங்க கோரியும் விழுப்புரத்தைச் சேர்ந்த மோகன்ராஜ் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

நிலுவையில் உள்ள இந்த இவ்வழக்கு இன்று பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, திமுக தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் விடுதலை, உயிரிழந்த சிறுவன் குடும்பத்திற்கு 1.5 லட்சம் கட்சி சார்பில் வழங்கியுள்ளதாகவும், முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து 1 லட்சம் வழங்கபட்டுள்ளது என தெரிவித்தார். குற்ற வழக்கு விசாரணை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்

தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டவிரோத பேனர் உள்ளிட்டவை மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்தார்.

அப்போது குறிக்கிட்ட நீதிபதிகள், மற்ற நிகழ்வுகளில் மரணமடைந்த நபர்களுக்கு வழக்கபடும் இழப்பீடு ஒப்பிடுகையில் இந்த இது போதுமா? என கேள்வி எழுப்பினார்.

மேலும் பேனர்கள் தொடர்பான விதிகளை முறைப்படுத்துவது மற்றும் அமல்படுத்துவது தொடர்பாக உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என தெரிவித்து நீதிபதிகள் விசாரணை ஜூலை 12 தேதிக்கு தள்ளிவைத்தனர்.

You may also like...