திராவிட இயக்க தலைவர்களின் பெயரை உச்சரித்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமாருக்கு பாராட்டு 🌅🌅🌅🌅🌅🌅🌅🌅 கருத்துக் குருடர்களுக்கும், சூது மதியாளர்களுக்கும் கழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் வழக்கறிஞர் நாமக்கல் இரா. நக்கீரன் கடும் கண்டனம்:

திராவிட இயக்க தலைவர்களின் பெயரை உச்சரித்த மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ்குமாருக்கு பாராட்டு
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
கருத்துக் குருடர்களுக்கும், சூது மதியாளர்களுக்கும் கழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் வழக்கறிஞர் நாமக்கல் இரா. நக்கீரன் கடும் கண்டனம்:
🌅🌅🌅🌅🌅🌅🌅🌅
நேற்றைய தினம் 29.11.21 மாநிலங்களவையில் எங்களது நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும், மாநிலங்களவையின் புதிய கழக உறுப்பினருமான அன்பு சகோதரர் கே ஆர் என். ராஜேஷ் குமார் அவர்கள் தான் பதவியேற்ற உறுதி மொழியில் திராவிட இயக்கத் தலைவர்களான ” தமிழக மக்களை கண் போல் பாதுகாக்கும் நம் பாசமிகு தலைவரின் பெயரையும், கழகத்தின் நம்பிக்கை நட்சத்திரம் அன்பிற்குரிய உதயநிதி அவர்களது பெயரையும் வாழ்த்திப் பேசியது கண்டு நாமெல்லாம் உள்ளம் பூரித்தோம்.

ராசிபுரம் கட்டநாச்சம்பட்டி என்ற குக்கிராமத்தில் பிறந்து தன்முனைப்பு கழகப் பணிகளால் ஆதிக்க சக்திகளின் தடைகளை தகர்த்தெறிந்து, நம் தலைவரின் நம்பிக்கையை பெற்று இன்று டெல்லி பட்டினத்தின் நாடாளுமன்ற மேலவை மன்றத்தில் அரசியலமைப்பின் இறையாண்மையை காப்பதாகவும், அதற்கு துணை நிற்கும் நம் திராவிட இயக்கத்தின் வாழும் தலைவர்களின் பெயர்களையும் வாழ்த்தி பேசியது கண்டு சில கருத்து குருடர்களும், இந்து தீவிரவாதி கோட்சேவுக்கு கோயில் கட்டுபவர்களும், அவர்களது அடிவருடிகளும் கண்டனம் என்ற பெயரில் நமது சகோதரர் ராஜேஷ் குமார் அவர்களை விமர்சனம் என்ற பெயரில் தங்கள் அறியாமையையும், அரசியல் அரிப்பையும் பொது ஊடகங்களில் வெளிப்படுத்தி உள்ளார்கள் அவர்களின் அடாத செயலை நான் வன்மையாக கண்டனம் செய்கிறேன்.
ஏற்றுக்கொண்ட தலைமையை மன்றங்களில் விளித்து பேசுவது என்பது அரசியல்வாதிகளின் கடமை அதைத்தான் நமது மாவட்டப் பொறுப்பாளர் அவர்களும் சிறப்பாக செய்தார். நமது நாடாளுமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் ஏ கே பி சின்ராஜ் அவர்கள் தன் பதவியேற்பின் போது கூட தீரன் சின்னமலை அவர்கள் பெயரையும், கோவை செழியன் அவர்களது பெயரையும் விளித்துப் பேசினார் என்பதை நாம் மறத்தலாகாது, அரசியல் முகவரி தொலைந்து போன அதிமுக உறுப்பினர்கள் ஊழல் ராணி ஜெயலலிதா பெயரை இதே மன்றத்தில் உச்சரித்தது அரசியல் அருவெறுப்பின் உச்சம். நமது சகோதரர் ராஜேஷ்குமார் பேசியது அவைக்குறிப்பில் ஏற்றப் படாது என்றாலும் மக்கள் மன்றத்தில் நிலைத்து நிற்கும்.
பதவிப்பிரமாணம் மேற்கொள்ளும் ஒரு திராவிட இயக்க இளைஞன் தன் உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தியது எங்கனம் அரசியலமைப்பு சட்ட இறையாண்மைக்கு எதிரானதாக அமையும்?
கோட்சே தாசர்கள், சங்கிகள் இறையாண்மை குறித்து திமு கழக உறுப்பினர்களுக்கு பாடம் எடுக்க வேண்டாம், அந்த தகுதி அவர்களுக்கு இல்லை.
மேலும் நேற்றைய தினமே சுற்றுச்சூழல் மேம்பாடு குறித்து சில கேள்விகளை நமது ராஜேஷ் குமார் அவர்கள் ஒன்றிய அமைச்சர்களிடம் கேள்விக்கணைகளை தொடுத்து பதில்களை பெற்றுள்ளார்.
வேளாண் சட்டங்களை முடக்குவதற்கு நம் தலைவரின் ஆணையை ஏற்று நமது மாண்புமிகு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பல கிடுகிடு போராட்டங்களை நாடாளுமன்றத்தில் நடத்தியதன் விளைவாகவும், விவசாயிகள் மற்றும் அனைத்து எதிர்க்கட்சிகளின் கடுமையான எதிர்ப்பின் விளைவாக அந்த சட்டம் ஏதாச்சதிகார மோடி அரசால் திரும்ப பெறப்படும் போது பாதிக்கப்பட்ட விவசாய தோழர்களுக்கு எவ்வித பரிகாரமும் நம் தலைவர் அவர்கள் கேட்டுக்கொண்டபடி அறிவிக்கப்படவில்லை, அது விவாதத்திற்கும் எடுக்கப்படவில்லை, இதுபோன்ற விடயங்களை விமர்சனம் செய்யும் கேடு மதி யாளர்கள் தங்கள் வசதிக்கு மறந்து போனது ஏன்?
அரசியல் விமர்சனம் என்பது விருப்பு வெறுப்பற்ற நிலையில், மக்கள் பயன் பெறும் வகையில் ஆக்கபூர்வமாக அமைய வேண்டும், அரசியல் காழ்ப்புணர்ச்சியை பாராட்டுவதில் எவ்வித பலனும் இல்லை, என்பதை விமர்சனம் என்ற பெயரில் பொதுத் தளங்களில், அதாவது ஊடகங்களில் கருத்தை வெளியிடுவோர் இனியாவது புரிந்து கொள்வார்களா?
நாடாளுமன்ற உறுப்பினர் அன்பு சகோதரர் அவர்களிடத்து இக்கணம் நான் கேட்டுக்கொள்வது பாராளுமன்றத்தில் நெடுங்காலமாக சிறப்பாக பணிபுரியும் நமது மூத்த கழக உறுப்பினர்களிடம் மேலும் ஆலோசனைகளை பெற்று இன்னும் சிறப்புடன் மேலவையின் தாங்கள் பணியாற்றவேண்டும் என்று அன்புடன் விழைகிறேன்,
நன்றி🙏
வெல்க திமு கழகம்!
வாழ்க தலைவர்!
இப்படிக்கு
வழக்கறிஞர் நாமக்கல் இரா. நக்கீரன், எம் ஏ, பி எல், கழக சட்ட திட்ட திருத்த குழு உறுப்பினர் 🏴🚩

You may also like...