தேனி அதிமுக எம்.பி ரவீந்திரநாத் சொத்த கணக்கை மறைத்து தேர்தலில் வெற்றிபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கதமிழ்செல்வன் சாட்சியம் அளித்துள்ளார்.
- தேனி அதிமுக எம்.பி ரவீந்திரநாத்
சொத்த கணக்கை மறைத்து தேர்தலில் வெற்றிபெற்றதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தங்கதமிழ்செல்வன் சாட்சியம் அளித்துள்ளார்.
கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலின்போது தேனி நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தின் மகன் ஓ பி ரவீந்திரநாத் குமார் அதிமுக சார்பில் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவனும், அம்மா முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக தங்க தமிழ்ச்செல்வனும் போட்டியிட்டிருந்தனர்..இந்த தேர்தலில் ரவீந்திரநாத்குமார் வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் அந்த தொகுதியின் வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் வங்கியில் பெற்ற பத்து கோடி ரூபாய் கடன் மற்றும் சொத்து விவரங்களை மறைத்து, பொய்யான தேர்தல் பிரமாணபத்திரம் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்திருந்தார். மேலும் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றார் என்றும் அவருடைய வெற்றி செல்லாது என்று அறிவிக்க கோரி வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ் எஸ் சுந்தர் முன்பு விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த வழக்கில் தங்க தமிழ்ச்செல்வன் இன்று மீண்டும் ஆஜராகி,
ஏற்கனவே இந்த வழக்கில் விரிவான பதில் மனு தாக்கல் செய்துள்ளாக தெரிவித்தார். கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலின்போது,ரவீந்திரநாத் சொத்துக்களை மறைத்து வேட்பு தாக்கல் செய்தார் அந்த முறைகேடுகளை புகார் அளித்த போது துணை முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி புகாரை ஏற்றுக்கொள்ளவதை தடுத்துவிட்டார் என்றும் தெரிவித்தார். அவர் சொத்து கணக்கை முறையாக சமர்பிக்கவில்லை என்றும் அதை நீதிமன்றத்தில் நீதி பெறுவதற்காகத்தான் சாட்சியம் அளிப்பதாக தெரிவித்தார். தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஜூன் 8 ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.