நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, காஃபிபோசா சட்டத்தின் கீழ் ஜாகிர் உசேனை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அதில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, காஃபிபோசா சட்டத்தில் அடைக்க கடந்த 2010ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

 

நகைகளுக்கான செயற்கை கற்களை இறக்குமதி செய்வதாக கூறி ஒரு கோடியே 17 லட்சம் ரூபாய் அளவிற்கு சுங்க வரி ஏய்ப்பை செய்தவரை காஃபிபோசா சட்டத்தின் கீழ் சிறையிலடைத்த உத்தரவை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மத்திய சுங்கத் துறையின் கீழ் இயங்கும் வருவாய் புலனாய்வு துறை, கடந்த 2010ஆம் ஆண்டு வைத்தியநாதன் என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையில் கைபற்றிய ஆவணங்கள், வைத்தியநாதனின் வாக்குமூலம் ஆகியவற்றின் அடிப்படையில் வெளிநாடுகளில் இருந்து நகைகளுக்கான செயற்கை கற்களை இறக்குமதி செய்வதாக கூறி, பொருளின் விலையை குறைவாக மதிப்பீடு செய்து ஒரு கோடியே 17 லட்ச ரூபாய் அளவிற்கு வரி ஏய்ப்பு செய்ததாக, சென்னை எழும்பூரில் ஹாவா எக்சிம் என்ற பெயரில் ஏற்றுமதி – இறக்குமதி நிறுவனம்
நடத்தி வரும் எஸ்.ஜாகிர் உசேன் என்பவரை காஃபிபோசா சட்டத்தில் சிறையில் அடைக்க கடந்த 2010ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி தமிழக அரசு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி ஜாகிர் உசேன் கடந்த 2011 ஆம் ஆண்டு தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, காஃபிபோசா சட்டத்தின் கீழ் ஜாகிர் உசேனை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவு தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்ததில், அதில் தலையிட எந்த காரணமும் இல்லை எனக் கூறி, காஃபிபோசா சட்டத்தில் அடைக்க கடந்த 2010ஆம் ஆண்டு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய மறுத்து, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

You may also like...