நீதிபதி என்.சதீஷ்குமார், ‘rs Barathi மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். அதேநேரம், ‘எதிர்காலத்தில் எந்த ஒரு பிரிவினர்களுக்கும் எதிராகவும் ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசக்கூடாது‘ என்று அறிவுரை வழங்கி கருத்து தெரிவித்தார்.

சென்னை, 

தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எம்.பி. கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் நடந்த கலைஞர் வாசகர் வட்டம் என்ற நிகழ்ச்சியில் பேசினார். அப்போது எஸ்.சி. பிரிவினர் மற்றும் நீதிபதிகள் குறித்து சில கருத்துக்களை தெரிவித்ததற்காக அவர் மீது எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த மே 23-ந்தேதி கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.பாரதிக்கு, சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு கடந்த மே 31-ந்தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கியது. பின்னர், அவருக்கு ஜாமீன் வழங்கி கடந்த 1-ந்தேதி சென்னை மாவட்ட முதன்மை செசன்சு கோர்ட்டு உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், போலீஸ் தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதி என்.சதீஷ்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் வக்கீல் கே.பிரபாகர் ஆஜராகி, ‘ஆர்.எஸ்.பாரதிக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யவேண்டும்‘ என்று வாதிட்டார்.ஆர்.எஸ்.பாரதி சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம், ஜாமீனை ரத்து செய்யக்கூடாது‘ என்று வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிபதி என்.சதீஷ்குமார், ‘இந்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார். அதேநேரம், ‘எதிர்காலத்தில் எந்த ஒரு பிரிவினர்களுக்கும் எதிராகவும் ஆர்.எஸ்.பாரதி அவதூறாக பேசக்கூடாது‘ என்று அறிவுரை வழங்கி கருத்து தெரிவித்தார்.

You may also like...