நீதிபதி வி.பாரதிதாசன், ‘வக்கீல் தொழில் பழமையும் பெருமையும் வாய்ந்தது

நீதிபதி வி.பாரதிதாசன், ‘வக்கீல் தொழில்
பழமையும் பெருமையும் வாய்ந்தது. நம் நாட்டின் சுதந்திரப் போராட்டம்
தொடங்கி நவீன இந்தியாவை கட்டமைப்பது வரை அனைத்திலும் வக்கீல்களின் பங்கு
இன்றியமமையாதது. ஆனால், அண்மை காலமாக பத்திரிக்கைகளில் வக்கீல்கள்
குறித்து வரும் செய்திகள் மிகவும் வருத்தமளளிக்கிறது. இந்தியா முழுவதும்
30 சதவீத போலி வக்கீல்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில்
கூட போலி வக்கீல்களைத் தடுக்கும் பணிகளை தமிழ்நாடு புதுச்சேரி
பார்கவுன்சில் மேற்கொண்டு வருகிறது. எனவே புதிய வக்கீல்கள், ஒருபோதும்
இந்த போலிகளுக்குத் துணை போகாமல், தனித்தன்மையுடன், நேர்மையுடன் பணியாற்ற
வேண்டும்’ என்று கூறினார்.

You may also like...