நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத பயிற்சித்துறை இயக்குநர்கள் மீது அவமதிப்பு வழக்கு ஐகோர்ட்டில் தாக்கல்
நீதிமன்ற உத்தரவை அமல்படுத்தாத
பயிற்சித்துறை இயக்குநர்கள் மீது அவமதிப்பு வழக்கு
ஐகோர்ட்டில் த இளநிலை பயிற்சி அலுவலர் நியமனம் தொடர்பான வழக்கில் உத்தரவை அமல்படுத்தாத வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர் மற்றும் கூடுதல் இயக்குநர் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.
தமிழக அரசின் வேலைவாய்ப்பு துறை கடந்த 2013ல் பிறப்பித்த அரசாணையில் தேசிய தொழில் சான்றிதழ், டிப்ளோமா சான்றிதழ் படிப்புக்கு மட்டும் தான் இந்த பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த அரசாணையை எதிர்த்து, தேசிய கவுன்சில் வழிகாட்டுதல் படி, பயிற்றுநர் சான்றிதழ் உயர்கல்வி தகுதியும் கூடுதலாக பெற்ற திரு. ஆரோக்கியசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கில், 2014 -ல் இடம் ஒதுக்கி வைக்க இடைக்கால உத்தரவிட்ட நீதிமன்றம், 2017-ல் ஒதுக்கி வைத்த இடத்தில் கூர்ந்து கவனித்து செயல்படுத்தவும் உத்தரவிட்டது. அதில், அரசு சார்பாக சிறப்பு பிளீடர் அளித்த வயது வரம்பு சலுகை இல்லை என்ற தவறான பதிலின் காரணமாக நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்திருந்தது.
இதை தொடர்ந்து, விதிகளின் படி, வயது வரம்பு சலுகை அளித்து பணி வழங்கப்பட்ட 87 பேர்களைப் போல எனக்கும் வழிவகை இருக்கிறது என்றும் தவறை சரி செய்ய வேண்டியும் கூடுதல் மனுவை அவமதிப்பு வழக்கில், ஆரோக்கியசாமி தொடர்ந்தார்.
இந்த மனு நீதிபதி. எஸ். வைத்தியநாதன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது, செயல் தலைமை நீதிபதியின் பொருத்தமான உத்தரவுப்படி, சம்பந்தப்பட்ட பெஞ்ச் முன்பாக 28.02.2023 அன்று அவசர உத்தரவுக்காக பட்டியலிட பதிவாளருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது.