பணி தொடர்பான விவகாரத்தில் ஊழியர் சார்பில் சங்கங்கள் வழக்கு தொடர முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்ள அனுமதியளித்த அரசின் அரசாணையை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

பணி தொடர்பான விவகாரத்தில் ஊழியர் சார்பில் சங்கங்கள் வழக்கு தொடர முடியாது என தெரிவித்துள்ள சென்னை உயர் நீதிமன்றம் நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்கள் மேற்கொள்ள அனுமதியளித்த அரசின் அரசாணையை எதிர்த்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது

தமிழகத்தில் நில அளவை பணிகளை கிராம நிர்வாக அலுவலர்களும் மேற்கொள்வதற்கு அனுமதி அளித்து கடந்த 2020ம் ஆண்டு தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது. இதனை எதிர்த்து தமிழ்நாடு நில அளவையர்கள் மத்திய சங்கம் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

For govt advocate general shanmugasundaram assited by agp t chelizyan

அதில், நில அளவை பணிகளை மேற்கொள்வதற்கு என நிபுணத்துவம் பெற்று அந்த பணிகளை மேற்கொண்டு வருவதாகவும், எந்தவித பயிற்சியும் இன்றி கிராம நிர்வாக அலுவலர்களை நில அளவை பணியில் ஈடுபட அனுமதிப்பது சட்ட விரோதம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கில் அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம் ஆஜராகி, இரண்டு பதவிகளுக்கும் அடிப்படை கல்வி தகுதி பத்தாம் வகுப்பு தான் எனவும் மேலும் நில அளவை பணிகளை மேற்கொள்வதற்காக கிராம நிர்வாக அலுவலர்களுக்கு பயிற்சியும் அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார்.

மேலும், சர்வே எண்களின் உட்பிரிவுடன் பட்டா வழங்கக் கோரி ஆன்லைனில் விண்ணபித்த மனுக்களில் 6 லட்சத்து 40 ஆயிரம் மனுக்கள் நிலுவையில் இருப்பதால், அதனை விரைந்து வழங்கும் வகையில் தான் கிராம நிர்வாக அலுவலர்கள் அளவை பணிகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டதாக தெரிவித்தார். மேலும் அரசின் உத்தரவை எதிர்த்து சங்கம் சார்பில் வழக்கு தாக்கல் செய்வதற்கு உரிமையில்லை எனவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி கிருஷ்ணகுமார் பிறப்பித்துள்ள உத்தரவில், பணி தொடர்பான விவகாரத்தில் அரசின் உத்தரவுகளை எதிர்த்து சம்பந்தப்பட்ட ஊழியர் வழக்கு தொடரலாமே தவிர, அவர்களின் சங்கத்தின் சார்பில் வழக்கு அடிப்படை உரிமை இல்லை எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

You may also like...