பழனி கோயில் பொது நல வழக்கு. திரு. இரமேஷ் தொடுத்தது. WP (MD) 16416 of 2020 இன்று நீதிபதிகள் திரு மஹாதேவன் திரு ஆதிகேசவலு முன்பாக வந்தது. மனுதாரர் T R இரமேஷிர்க்காக மூத்த வழக்கறிஞர் திரு ராகவாச்சாரியும் வழக்கறிஞர் வாதாடினார. 1966’ல் பழனிக் கோயிலுக்கு
[3/23, 22:22] Tr Ramesh Temple Case: பழனி கோயில் பொது நல வழக்கு. திரு. இரமேஷ் தொடுத்தது. WP (MD) 16416 of 2020 இன்று நீதிபதிகள் திரு மஹாதேவன் திரு ஆதிகேசவலு முன்பாக வந்தது. மனுதாரர் T R இரமேஷிர்க்காக மூத்த வழக்கறிஞர் திரு ராகவாச்சாரியும் வழக்கறிஞர் திரு அபிநவ் பார்த்தசாரதியும் வாதாடினார்கள். 1966’ல் பழனிக் கோயிலுக்கு நியமனம் செய்யப்பட்ட செயல் அலுவலர் அறநிலையத்துறை சட்டம் பிரிவு 75-B ன் கீழ்
நியமனம் செய்யட்டப்பட்டார். இந்தப் பிரிவில் இயற்றப்பட வேண்டிய விதிகள் இயற்றப்படவில்லை. ஆதலால் இந்த நியமனம் சிதம்பரம் கோயில் வழக்கில் உச்ச நீதி மன்றம் கொடுத்த வழிகாட்டுதலுக்கு விரோதமானது என திரு ராகவாச்சாரி குறிப்பிட்டார். மேலும் இந்த வழக்கில் இது போல் பல கோயில்களில் சட்ட விரோதமாக இருக்கும் செயல் அலுவலர்களையும் நீக்க நீதி மன்றம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது நீதிபதிகள் உங்கள் வழக்கு பழனி கோயில் சம்பந்தமான வழக்கு மட்டுமே. அதனால் உங்கள் கோரிக்கையை விரிவுபடுத்தவேண்டாம். அப்பொழுது நாங்கள் பலரையும் வழக்கில் சேர்க்க வேண்டிவரும் என குறிப்பிட்டனர். மனுதாரர் இரமேஷ் நீதிபதிகளிடம் பழனி வழக்கு குறித்து இந்த அமர்வு தீர்மானித்தால் போதுமானது எனக் கூறினார். நீதிபதிகள் அதை ஏற்றுக்கொண்டனர்.
மேலும் வழக்கின் தன்மை குறித்து நீதிபதிகள், ஒரு கோயிலுக்கு 5 வருடங்களுக்கு மட்டுமே செயல் அலுவலர் நியமனம் செல்லும் என்று அறநிலையத்துறையின் செயல் அலுவலர் நியமன விதிகள் சொல்கின்றன. இதையும், சிதம்பரம் கோயில் வழக்கில் ஒரு செயல் அலுவலர் தொடர்ந்து இருக்க முடியாது என்று சொல்லியுள்ளது. அதை மட்டும் நாம் கணக்கில் கொண்டால் போதுமானது என்றனர்.
அறநிலையத்துறை சிறப்பு வழக்கறிஞர் திரு அருண் நடராஜன் செயல் அலுவலர் விதிகள், 2015 வருடம் முன்பு இருக்கும் செயல் அலுவலர் பதவிகளைப் பாதுகாக்கிறது. அதை நீதி மன்றம் கருத்தில் கொள்ள வேண்டும் என்றார்.
இதைக் கடுமையாக எதிர்த்த திரு இரமேஷ் முன்தேதியிட்டு செயல் அலுவலர் நியமனம் செல்லும் என்று சொல்வதற்கு அறநிலையத்துறை சட்டத்தில் இடமில்லை. இது உச்ச நீதி மன்றம் தீர்ப்புகளுக்கு எதிரானது என்று சொன்னார். மேலும் பழனி கோயில் செயல் அலுவலர் பிரிவு 45ன் கீழ் நியமனம் செய்யப்படவில்லை. பிரிவு 75-B ன் கீழ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் நியமனம் செல்லாது என்று செப்டெம்பர் 2020ல் தனி நீதிபதி சொல்லியுள்ளார். அதை எதிர்த்து அரசுத் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. தனி நீதிபதி தீர்ப்பை றது செய்ய அமர்வு மறுத்துவிட்டது. அறங்காவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் தக்காரிடம் இருந்து நிர்வாகத்தை மேற்கொள்ள வேண்டும் என்று சொல்லி வழக்கை அமர்வு முடித்துவைத்துள்ளது. எனவே செயல் அலுவலர் தொடர்வது சட்ட விரோதம் என்றும இரமேஷ் சொன்னார்.
வழக்கு இறுதி விசாரணைக்காக ஏப்ரல் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது
[3/23, 22:28] sekarreporter1: Ok