பாராளுமன்ற உறுப்பினர் திரு பி.வில்சன் (ராஜ்யசபா) மாண்புமிகு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் பழங்குடியினர்

[3/20, 07:52] Mohamad Rafic: 16.3.2023 அன்று பாராளுமன்ற உறுப்பினர் திரு பி.வில்சன் (ராஜ்யசபா) மாண்புமிகு மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர் திரு டாக்டர் வீரேந்திர குமார் மற்றும் பழங்குடியினர் விவகாரங்களுக்கான மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு அர்ஜுன் முண்டா ஆகியோரை நேரில் சந்தித்து இந்து பழங்குடியினப் பெண்கள் இந்து வாரிசுச் சட்டத்தின் பலன்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளதை சுட்டி காட்டி, அதனால் அவர்களுக்கு ஏற்பட்ட பாகுபாடுகளை எடுத்துரைத்து
பழங்குடியினப் பெண்கள் தங்களின் பழக்கவழக்கங்களை விட இந்து வாரிசுச் சட்டத்தினால் பலன்கள் இந்து பட்டியல் பழங்குடியினப் பெண்களுக்குப் பயன் தருவதாக இருந்தால், அந்தச் சட்டத்தைப் பயன்படுத்துமாறு கோரிக்கை வைத்து இரண்டு தனித்தனி கடிதங்களை அளித்துள்ளார்.
————————————————
 
 
   

நாள் : 16.03.2023
 
பெறுநர்
திரு டாக்டர் வீரேந்திர குமார்
மாண்புமிகு ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்,
இந்திய அரசு
201 சி-விங், சாஸ்திரி பவன், புது தில்லி – 110115
திரு அர்ஜுன் முண்டா
மாண்புமிகு மத்திய பழங்குடியினர் நலத்துறை அமைச்சர்,
இந்திய அரசு
400 பி-விங், சாஸ்திரி பவன்,
புது தில்லி – 110115

,
 
திரு டாக்டர் வீரேந்திர குமார்,

அன்புள்ள திரு அர்ஜுன் முண்டா

பொருள் : இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் பிரிவு 2 (2) இன் கீழ் பட்டியல் பழங்குடியின பெண்களுக்கான அறிவிப்பு வழங்குதல் தொடர்பாக  
      *****
வணக்கம்
 
இந்த கடிதத்தின் வாயிலாக தங்கள் நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் கீழ் பழங்குடியின சமூகத்தை சேர்ந்த இந்து பெண்களுக்குச் சொத்துரிமை வழங்குவது தொடர்பான ஒரு முக்கியமான விஷயத்தை தங்களின் கனிவான கவனத்திற்கு இந்த கடிதத்தின் வாயிலாக கொண்டு வருகிறேன்.
 
முன்னதாக இந்து வாரிசுரிமைச் சட்டம் 1956 ஆனது தந்தை அல்லது  பிரிக்கப்படாத இந்து கூட்டு  குடும்பத்தின் சொத்துக்களை மகள்கள் சமமாகப் பெறுவதற்கான உரிமையை அங்கீகரிக்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள்.
இருப்பினும், இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டம், 2005 (2005 இன் 39 வது சட்டம்) க்குப் பிறகு, சொத்துரிமையைப் பொறுத்தவரை அனைத்து இந்து பெண்களும் ஆண்களுக்கு சமமாக நடத்தப்பட வேண்டும்  என்பதே  சட்டத்தின் நிலைப்பாடாகும்
 
ஆயினும் , இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956, சட்டத்தின் பிரிவு 2(2) பின்வருமாறு கூறுகிறது:
உட்பிரிவு (1) இல் உள்ள எதையும் பொருட்படுத்தாமல், ஒன்றிய  அரசு, அரசிதழில் அறிவிக்கை மூலம் அல்லது வேறுவிதமாக உத்தரவிடாவிட்டால் இச்சட்டத்தின் பிரிவு 366 இன் உட்பிரிவு (25) இன் பொருளானது  எந்தவொரு பட்டியல் பழங்குடி உறுப்பினர்களுக்கும் பொருந்தாது.
 
தடையற்ற உட்பிரிவுடன் தொடங்கும் இந்தப் பகுதியின் காரணமாக, 1956ஆம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் மற்ற அனைத்து விதிகளையும் விட  இந்த பிரிவானது மிகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
இப்பிரிவின் நிகர விளைவு என்னவென்றால், தந்தை மற்றும் இந்து பிரிக்கப்படாத குடும்பத்தின் சொத்து மற்றும் சொத்தின் வாரிசுரிமையில் மற்ற பெண்களுக்கு வழங்கப்படும் நன்மை ,பழங்குடியினத்தை சார்ந்த இந்து பெண்களுக்கு  நீட்டிக்கப்படவில்லை.
இது  பட்டியல் பழங்குடிகளின் இந்து பெண் உறுப்பினர்கள் மட்டுமே தங்கள் தந்தையின் /இந்து பிரிக்கப்படாத குடும்ப சொத்துக்களில் சம பங்கு பெற சட்டப்பூர்வமாக உரிமை இல்லாத வகையில் முற்றிலும் அநீதியான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவின் கோட்பாட்டுக்கு எதிரானது என்பதால் பாலின அடிப்படையிலான எந்தவொரு பாகுபாட்டையும் நிலைநிறுத்த முடியாத அளவுக்கு சட்டம் இப்போது உருவாகியுள்ளது. வரலாற்று அடக்குமுறை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சொத்துக்கான அணுகல் இல்லாததால், பட்டியல் பழங்குடியின பிரிவிற்குள்ளாகவே பெண்கள்தான்  மிகவும் பின்தங்கிய  நிலையில்  இருப்பதாக தரவுகள்  காட்டுகிறது. எனவே, பட்டியல் பழங்குடிப் இந்து பெண்களுக்கான வாரிசுரிமையைப் பறிக்கும் இந்தப் போக்கைத் தொடர்வதை நாம் அனுமதிக்க முடியாது.
வாரிசுரிமையைப் பொறுத்தவரை ஒரு குறிப்பிட்ட அட்டவணை பழங்குடியினரின் பழக்கவழக்கங்கள், பழங்குடியின பெண்களுக்கு மிகவும் சாதகமான நிலையில் இருந்தால், அந்த நிலைக்கு இடையூறு ஏற்படக்கூடாது என்பது நிச்சயமாக உண்மைதான்.

இந்த நேரத்தில் மாண்புமிகு இந்திய உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை உங்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன். அதில், இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956-ன் கீழ் பழங்குடியினருக்குப் பொருந்தும் வகையில் அளிக்கப்பட்ட விலக்கை திரும்பப் பெறுமாறு மாண்புமிகு நீதிமன்றம் ஒன்றிய  அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதேபோல், மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அவர்கள், 22.02.2023 தேதியிட்ட வழங்கிய மற்றொரு தீர்ப்பில், பழங்குடியின மற்றும் பழங்குடியின அல்லாத பெண்களுக்கு இடையிலான இந்த பாகுபாடு குறித்து ஆழமாக ஆராய்ந்து, மற்ற உயர் நீதிமன்றங்களின் இதேபோன்ற தீர்ப்புகளில் இருந்து  சிரமப்பட்டு பிரித்தெடுத்து, பழங்குடிப் பெண்கள் தங்கள் தந்தையின் / இந்து பிரிக்கப்படாத குடும்பம் / கணவரின் சொத்துக்களில் உரிய பங்கைப் பெறுவதற்கு ஏதுவாக இந்த விலக்கு நீக்கப்பட வேண்டும் என்று உத்தரவிடடார்.
இந்த நிலைமைக்கான சட்டரீதியாக தீர்வுகாண மிகவும் எளிமை வழியை கூற நான் விரும்புகிறேன் .இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் பிரிவு 2 (2) ஆனது பட்டியல் பழங்குடியினருக்கு இந்தச் சட்டம் பொருந்தும் வகையில் அறிவிக்கை மூலம் பயன்படுத்த ஒன்றிய  அரசை அனுமதிக்கிறது. எனவே,  1956-ம் ஆண்டு இந்து வாரிசுரிமைச் சட்டத்தின் விதிகளைக் காட்டிலும், பட்டியல் பழங்குடிப் பெண்களுக்கு தற்போதுள்ள பழக்கவழக்கங்கள் அதிக நன்மை பயக்கும் சந்தர்ப்பங்காளைத் தவிர்த்து, மற்ற பட்டியல் பழங்குடியினத்தை சார்ந்த பெண்களுக்கு  இந்து வாரிசுரிமைச் சட்டம், 1956 இன் பிரிவு 2(2)ன் கீழ்,  சட்டத்தின் நன்மைகள் கிடைக்கும் வகையில் தயவுகூர்ந்து ஒரு அறிவிப்பை வெளியிடுமாறு கேட்டுக்கொள்கிறேன். இது பட்டியல் பழங்குடி சமூகத்திற்குள் பாலின இடைவெளியைக் குறைக்கவும், பட்டியல் பழங்குடியினருக்குள் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் சமத்துவத்திற்கு வழிவகுக்கும். ஒருதலைசார்பற்ற, ஆனால் அதே சமயம் பழங்குடியின சமூகத்தை சார்ந்த நமது சகோரரிகளின் நலன்களுக்காக  பொதுவான வகையில் கைகோர்த்து முன்னேற இந்த பிரச்னை தொடர்பாக அணுகூலமான முடிவை பரிசீலிப்பீர்கள் என்று நம்புகிறேன்.
 
அன்புடன்,
பி. வில்சன்
நாடாளுமன்ற உறுப்பினர் ( மாநிலங்களவை )
[3/20, 07:52] Mohamad Rafic: 👏👏👏👏👏👏

You may also like...