பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நியமித்த வழக்கறிஞர் எம்.சி.சுவாமி தனது அறிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், எனவே அனைத்து

வழக்கறிஞர் யானை ராஜேந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனுவில், ‘‘ அருணாச்சலேஸ்வரர் வீற்றிருக்கும் திருவண்ணாமலை மலை மிகவும் பழமையான மலை மட்டுமின்றி புனிதமான மலையும் கூட. 2 ஆயிரத்து 669 அடி உயரமும், 14 கிமீ சுற்றளவும் கொண்ட இந்த மலையில் பவுர்ணமி கிரிவலம் மிகவும் பிரசித்தி பெற்றது. சுவாமியை தரிசனம் செய்யவும், கிரிவலம் செல்வதற்காகவும்  ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த மலையைச் சுற்றிலும் கிரிவலப்பாதையில் ஆக்கிரமிப்புகள் புற்றீசல் போல பெருகி வருகிறது. மலையிலும் சிமெண்ட் சாலைகள் போடப்பட்டு கழிப்பறைகள், குளியல் அறைகள் கட்டப்பட்டுள்ளன. மலையைச் சுற்றியிருந்த அடர்த்தியான பழமையான மரங்கள் வெட்டப்பட்டுள்ளன. மலைப்பகுதியை ஆக்கிரமித்து குடியிருப்புகளும் அதிகளவில் கட்டப்பட்டுள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. மலையைச் சுற்றிலும் கழிவுகள் குவிக்கப்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை தமிழக அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு அனுமதித்துள்ளனர். எனவே, திருவண்ணாமலை மலை மற்றும் கிரிவலப்பாதையில் உள்ள சட்டவிரோத  ஆக்கிரமிப்புகளை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும். என கோரியிருந்தார்.

இந்த வழக்கை  கடந்த ஜூலை மாதம் விசாரித்த உயர் நீதிமன்றம் இது்தொடர்பாக மாவட்ட ஆட்சியர், வனத்துறை, வருவாய்துறை மற்றும் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் எம்.சி. சுவாமி ஆகியோர் கொண்ட குழுவை அமைத்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தது. 

இந்நிலையில் இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி. கிருஷ்ணகுமார் மற்றும் நீதிபதி பி.பி. பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது உயர் நீதிமன்றம் ஏற்கெனவே நியமித்த வழக்கறிஞர் எம்.சி.சுவாமி தனது அறிக்கையில், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருப்பதாகவும், எனவே அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட கண்காணிப்பு குழு ஒன்றை அமைக்கவேண்டும் என வலியுறுத்தியிருந்தார். 

அதேபோல மனுதாரரான யானை ராஜேந்திரன் ஆஜராகி கிரிவலப்பாதை மற்றும் மலையை ஆக்கிரமித்துள்ள நபர்களுக்கு சட்டவிரோதமாக பட்டா வழங்கப்பட்டுள்ளதாகவும், எனவே இதுதொடர்பாக அனைத்து துறை அதிகாரிகளையும் ஒருங்கிணைத்து விதிமீறல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்  வகையில் ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும், எனக் கோரினார்.

அதையடுத்து நீதிபதிகள், திருவண்ணாமலை கிரிவலப்பாதை மற்றும் மலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளை ஒருங்கிணைத்து கண்காணிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி எம்.கோவிந்தராஜன் தலைமையி்ல் மாவட்ட ஆட்சியர் மற்றும் அனைத்து துறை அதிகாரிகள் அடங்கிய  ஒருங்கிணைப்பு குழு  அமைத்தும், இதுதொடர்பாக 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செயயவும் உத்தரவிட்டுள்ளனர்.

You may also like...