வக்கீல் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் தரப்பில் வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, ‘‘கள்ளக்குறிச்சி கைதான கண்ணுக்குட்டி என்பவர் மீது 31 சாராய வழக்குகள் உள்ளன. 20 ஆண்டுகளாக சாராய தொழில் செய்வதாக கூறியுள்ளார். அதனால், ஆளும் கட்சியாக தி.மு.க., மீது மட்டும் குற்றம் சாட்டவில்லை. சாராய தொழிலுக்கு அ.தி.மு.க.,வும் துணை போய் உள்ளது. உள்ளூர்
சென்னை, செப்.11-
கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்து 72 பேர் பலியாகியுள்ளனர். இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி., போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற கோரி சென்னை ஐகோர்ட்டில் அ.தி.மு.க., பா.ம.க., பா.ஜ.க.,வைச் சேர்ந்த வக்கீல்கள் பொதுநல வழக்குகளை தனித்தனியாக தாக்கல் செய்துள்ளனர்.
இந்த வழக்கில் அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் பி.எஸ்.ராமன் ஏற்கனவே வாதம் செய்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனுதாரர்கள் தரப்பில் வக்கீல்கள் வாதிட்டு வருகின்றனர்.
பா.ம.க.வைச் சேர்ந்த கே.பாலு சார்பில் மூத்த வக்கீல் என்.எல்.ராஜா ஆஜராகி, ‘‘சாராயம் குடித்து இறந்தவர்கள் தரப்பில் யாரும் வழக்கு தொடரவில்லை என்று அட்வகேட் ஜெனரல் வாதிட்டார். சமுதாயத்தில் பின்தங்கிய, ஆதரவற்றோர் பாதிக்கப்படும்போது, அவர்கள் சார்பில் யார் வேண்டும் என்றாலும் வழக்குத் தொடரலாம். மாநில போலீசாரின் விசாரணை நேர்மையாக நடைபெறாது. முதல்-அமைச்சர், உள்துறை அமைச்சர் புலன் விசாரணை குறித்து போலீசாருக்கு சம்மன் அனுப்பி விவரங்களை தெரிந்துக் கொள்ள அதிகாரம் உண்டு. இந்த விவகாரத்தில் 9 அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு, அதில் சில அதிகாரிகளுக்கு மீண்டும் பணி வழங்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்ற வேண்டும்’’ என்று வாதிட்டார்.
பா.ஜ.க.,வைச் சேர்ந்த வக்கீல் ஏற்காடு ஏ.மோகன்தாஸ் தரப்பில் வக்கீல் யானை ராஜேந்திரன் ஆஜராகி, ‘‘கள்ளக்குறிச்சி கைதான கண்ணுக்குட்டி என்பவர் மீது 31 சாராய வழக்குகள் உள்ளன. 20 ஆண்டுகளாக சாராய தொழில் செய்வதாக கூறியுள்ளார். அதனால், ஆளும் கட்சியாக தி.மு.க., மீது மட்டும் குற்றம் சாட்டவில்லை. சாராய தொழிலுக்கு அ.தி.மு.க.,வும் துணை போய் உள்ளது. உள்ளூர் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகள் துணை இல்லாமல் 20 ஆண்டுகள் சாராய வியாபாரத்தை கண்ணுக்குட்டியால் செய்ய முடியாது. பாதிக்கப்பட்டவர்கள் யாரும் வழக்கு தொடரவில்லை என்று அரசு தரப்பு வாதம் செய்கிறது. ஆனால், சாராயம் குடித்து இறந்தவர்களால் வழக்குத் தொடர முடியாது. அவர்கள் உறுவினருக்கு தலா 10 லட்சம் ரூபாயை அரசு கொடுத்துள்ளது. அப்புறம் யார் வழக்கு தொடர முன்வருவார்கள்?’’ என்று கேள்வி எழுப்பினார்.
மேலும், விஞ்ஞானி நம்பிநாராயணன் மீது கேரளா போலீசார் பதிவு செய்தது பொய் வழக்கு என்று சி.பி.ஐ. நடத்திய விசாரணையில்தான் தெரியவந்தது. அண்மையில் கூட செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மாணவர்களிடம் இருந்து வெறும் 5 கிலோ கஞ்சாதான் பறிமுதல் செய்துள்ளனர். ஆனால், மத்திய வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள், 5 கோடி மதிப்புள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி சாராய வழக்கையும் சி.பி.ஐ., அல்லது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளை கொண்டு விசாரிக்க வேண்டும்’’ என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள், விசாரணையை நாளைக்கு (வியாழக்கிழமைக்கு) தள்ளிவைத்தனர்.அதற்கு கள்ளக்குறிச்சி சம்பவத்தில் போலீஸ் அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பணியிடை நீக்கம் செய்யப்பட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு எப்படி மீண்டும் பணி வழங்கப்பட்டது? என்பது குறித்து விரிவான அறிக்கையை தாக்கல் செய்யவேண்டும்’’ என்று தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டனர்.