அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்குரைஞர் என். விஜயராஜ் ஆஜரானார். வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் லூகாஸ் அந்தோணி இறந்து விட்டார். அரசு தரப்பில் 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 38 ஆவணங்கள் 18 சான்று பொருள்கள் குறியீடு செய்யப்பட்டது. Double Life court order

சொத்துக்காக தாயை குண்டு வைத்து கொன்ற மகனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை.

பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, வி களத்தூர் காவல் நிலைய எல்லையில் உள்ள அரசலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்தம்மாள் வயது 74. இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். இவரது கணவர் ராமசாமி பல ஆண்டுகளுக்கு முன்பே இறந்துவிட்டார். மகன் மகளுக்கு நல்ல இடத்தில் திருமணம் செய்து வைத்த முத்தம்மாள் தனியாக வீடு கட்டி அதில் வசித்து வந்தார்.

இளைய மகன் செல்வகுமார் தன்னை கவனித்துக் கொள்ளாததால் சில சொத்துக்களை மற்ற மகன்கள் மற்றும் மகள்கள் பெயருக்கு எழுதி வைத்துள்ளார். எஞ்சி இருக்கும் சில சொத்துக்களையும் மற்ற மகன்களுக்கு எழுத இருந்தார். இதனால் ஆத்திரமடைந்த செல்வகுமார், முத்தமாளை கொலை செய்ய முடிவு செய்தார். தனக்கு தெரிந்தவர்கள் மூலம் வெடி மருந்தை வாங்கி வந்து, அதை ஒரு பெட்டியில் வைத்து அந்தப் பெட்டியைத் திறந்தால் வெடிக்கும் வகையில் உருவாக்கி அதனை முத்தம்மாள் வீட்டில் 21.1.2016 அன்று வைத்துவிட்டார். வயல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வந்த முத்தம்மாள், வெடிகுண்டுபெட்டியை திறக்கும் போது அது வெடித்து படுகாயமடைந்தார். சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த முத்தம்மாள், மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனளிக்காமல் 22.1.2016 அன்று மருத்துவமனையில் இறந்துவிட்டார்.

இந்த வழக்கை விசாரித்த வி.களத்தூர் காவல்துறையினர் செல்வகுமார், பூபதி சரவணன், லூகாஸ் அந்தோணி, பால்டப்பா என்கிற மணிகண்டன் ஆகிய 5 பேரை கைது செய்து அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இந்த வழக்கு பூந்தமல்லியில் உள்ள வெடிகுண்டுகள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசு தரப்பில் சிறப்பு குற்றவியல் வழக்குரைஞர் என். விஜயராஜ் ஆஜரானார். வழக்கு நடைபெற்ற காலகட்டத்தில் லூகாஸ் அந்தோணி இறந்து விட்டார். அரசு தரப்பில் 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். 38 ஆவணங்கள் 18 சான்று பொருள்கள் குறியீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கில் இன்று (17-02-2022) தீர்ப்பளித்த நீதிபதி கே. ஹெச். இளவழகன், எதிரி செல்வகுமார் மீதான குற்றச்சாட்டுகள் அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை மற்றும் ரூபாய்.20000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

இந்த குற்றத்தில் பூபதி, சரவணன், மணிகண்டன் ஆகியோர் குற்ற எண்ணத்துடன் செயல்படவில்லை என்று கூறி அவர்களை நீதிபதி விடுதலை செய்தார்.

You may also like...