SEKAR REPORTER

அரசு தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் அவரது முன் ஜாமின் மனு காலாவதி ஆகிவிட்டது என்று தெரிவித்தார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

சவுக்கு சங்கர் நேர்காணலை ஒளிபரப்பிய வழக்கில் ரெட் பிக்ஸ் தலைமை நிர்வாகி பெலிக்ஸ் ஜெரால்ட் கைது செய்யப்பட்டு விட்டதால் அவரது முன் ஜாமின் மனுவை சென்னை மன்றம் தள்ளுபடி செய்துள்ளது

பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசியதாக சவுக்கு சங்கர் மற்றும் ஃபெலிக்ஸ் ஜெரால்ட் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்டார் இந்நிலையில் தனக்கு முன்ஜாமின் கேட்டு பெலிக்ஸ் ஜெரால்ட் சென்னை நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்

இந்த நிலையில் கடந்த வாரம் டெல்லியில் பெலிக்ஸ் தமிழக காவல்துறையினால் கைது செய்யப்பட்டு சென்னைக்கு அழைத்துவரப்பட்டார்

இதனிடையே பெலிக்ஸ் ஜெரால்ட் தாக்கல் செய்த முன்ஜாமின் மனு இன்று நீதிபதி சக்திவேல் முன்பு விசாரணைக்கு வந்தது

அப்போது அரசு தரப்பு வழக்கறிஞர் முனியப்பராஜ் ஆஜராகி பெலிக்ஸ் ஜெரால்ட் கடந்த வாரம் கைது செய்யப்பட்டு விட்டதாகவும் அவரது முன் ஜாமின் மனு காலாவதி ஆகிவிட்டது என்று தெரிவித்தார்

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி சக்திவேல் , ஃபெலிக்ஸ் ஜெரால்டுவின் முன் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version