SEKAR REPORTER

அரியலூர் மாவட்டம் வி.களத்தூர் காவல்நிலையத்தில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்கு ரத்து (F.I.R quash)

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

[16/07, 10:56] sekarreporter1: மின் இணைப்பு கோரி கல்லூரி மாணவன் தொடர்ந்த வழக்கில், உரிய சட்ட விதிகளை பின்பற்றி மின் இணைப்பு வழங்க தமிழ்நாடு மின்வாரியத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடலூர் மாவட்டம் சிலம்பிமங்கலத்தை அடுத்த சின்னாண்டிகுழி கிராமத்தை சேர்ந்தவர் வெங்கடபதி.

கல்லூரி இறுதியாண்டு படித்து வரும் இவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

அதில், கடலூர் மாவட்டம் சின்னாண்டிகுழி என்ற குக்கிராமத்தில் உள்ள தன் வீட்டிற்கு மின்சார இணைப்பு கிடைக்காமல் பல ஆண்டுகளாக வசித்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார துறையின் பரங்கிப்பேட்டை உதவி பொறியாளர் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோருக்கு கடந்த மார்ச் மாதம் மனு அளித்தாகவும், ஆனால் இது வரை எந்த வித நடவடிக்கை இல்லை என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் குடிநீர் மற்றும் மின் இணைப்பு கிடைக்காமல் தன்னுடைய கல்வி மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இரவு நேரங்களில் தன்னுடைய வயதான பெற்றோர் மிகவும் சிரமப்படுவதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட ஆட்சியருக்கு அளித்த மனு மீது நடவடிக்கை எடுத்து முறையான குடிநீர் வசதி மற்றும் வீட்டிற்கான மின் இணைப்பை வழங்க உத்தரவிட கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மின் இணைப்பு வழங்க தயாராக இருப்பதாகவும், ஆனால் மனுதாரரின் வீட்டின் அருகில் மின்கம்பம் நட்ட போது, அந்த இடம் வேறு ஒரு நபருக்கு சொந்தமானது என பிரச்சனை எழுந்தது. இது தொடர்பான வழக்கு காவல்நிலையத்தில் விசாரணையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, உரிய சட்ட விதிகளை பின்பற்றி, மனுதாரரின் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க உத்தரவிட்டார்.

மேலும் இதை செயல்படுத்தியது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணை ஜூலை 23ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்
[16/07, 11:43] sekarreporter1: தமிழ்நாட்டில் மணல் குவாரி முறைகேடு புகார் தொடர்பாக தொழிலதிபர்கள் மீது அமலாக்கத்துறை பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட கூடுதலாக மணல் அள்ளி விற்பனை செய்ததாகவும், அதன் மூலம் கிடைத்த வருமானத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகக் கூறி, கடந்த ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி ஒரே நேரத்தில் புதுக்கோட்டை மாவட்டம் முத்துப்பட்டினத்தை சேர்ந்த தொழிலதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், ரத்தினத்தின் உறவினர் கோவிந்தன், கரிகாலன் மற்றும் பொதுப்பணித்துறையில் பணியற்றிய ஓய்வுபெற்ற பொறியாளர் திலகம், நீர்வளத்துறை முதன்மை பொறியாளர் முத்தையா ஆகியோருக்கு சொந்தமான வீடுகள் மற்றும் எழிலகத்தில் உள்ள நீர்வளத்துறை அலுவலகம் என மொத்தம் 34 இடங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தினர்.

இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்த இந்த சோதனையில் மணல் குவாரி அதிபர் ராமச்சந்திரன், திண்டுக்கல் ரத்தினம், கரிகாலன் மற்றும் நீர்வளத்துறை அதிகாரிகள் வீடுகளில் இருந்து கணக்கில் வராத பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்து ஆவணங்கள், 12.82 கோடி ரூபாய் ரொக்க பணம், 56.86 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 1,024 கிராம் தங்கம் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும், சொத்து முடக்கத்தை நீக்க வேண்டும் என்றும் தொழிலதிபர்கள் ராமச்சந்திரன், ரத்தினம் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள்
விக்ரம் சவுத்ரி,அப்துல்சலீம் மற்றும் இளம்பாரதி, விஜய்மேகநாத் ஆகியோர், சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தில் கனிமவள சட்டம் சேர்க்கப்படாத நிலையில், இவர்கள் மீது வழக்கு தொடர்ந்தது சட்டவிரோதம்,
அமலாக்கத்துறையின் அதிகார வரம்புக்குள் வராது, உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது
என வாதிட்டனர்.

இந்த வாதத்தை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், அமலாக்கத் துறை நடவடிக்கை சட்டவிரோதமானது எனவும், மணல் குவாரிகள் அமலாக்க துறை அதிகார வரம்புக்குள் வராது எனவும் கூறி, தொழிலதிபர்களுக்கு எதிரான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளனர். அதேபோல, சொத்து முடக்கத்தையும் நீக்கியும் உத்தரவிட்டுள்ளனர்.
[16/07, 12:01] sekarreporter1: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

உயர் நீதிமன்ற உத்தரவுப்படி தனக்கு ஓய்வூதிய பலன்கள் வழங்கப்படவில்லை எனக்கூறி அண்ணா பல்கலைக்கழக பதிவாளருக்கு எதிராக ஓய்வு பெற்ற பேராசிரியர் தேவதாஸ் மனோகரன் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் நோட்டீஸ் அனுப்பியும் நேரில் ஆஜராகாததால் பதிவாளர் ஜெ.பிரகாஷ்க்கு எதிராக பிடிவாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம்
உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், குமரேஷ் பாபு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் ஜெ.பிரகாஷ் நேரில் ஆஜரானார்.

அவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அவினாஷ் வாத்வானி, வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் காரணமாகவும், நோட்டீசில் பெயர் பிழையாக அச்சடிக்கப்பட்டிருந்ததாலும் பதிவாளர் அன்றைய தினம் ஆஜராக இயலவில்லை என கூறினார்.

மேலும், மனுதாரர் மீது லஞ்ச வழக்கு நிலுவையில் உள்ளதால் அவருக்கு வழங்க வேண்டிய பணிக்கொடை (Gratuity) தொகையை வழங்க இயலாது என தெரிவித்தார். அதனை தவிர்த்து மற்ற ஓய்வூதிய பலன்கள் வழங்கப்பட்டுவிட்டதாகவும் தெரிவித்தார்.

இதனையடுத்து பணிக்கொடை தவிர்த்து இதர ஓய்வூதிய பலன்களை வழங்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 22ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[16/07, 13:38] sekarreporter1: சட்ட விரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் வழங்கப்பட்ட வங்கி ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அதன் உண்மை தன்மையை ஆராயக்கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்க கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு மீது இன்று உத்தரவு பிறப்பிக்கபடும் என அறிவித்திருந்த நிலையில், செந்தில் பாலாஜி தரப்பில் புதிதாக இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

அதில், வங்கி தொடர்பான அசல் ஆவணக்களுக்கும், அமலாக்கத்துறை வழங்கிய ஆவணங்களுக்கும் வேறுபாடுகள் இருப்பதாகவும், தங்களுக்கு வழங்கபட்ட ஆவணங்களில் கையால் எழுதி, திருத்தப்பட்டுள்ளதால், தங்களுக்கு வழங்கிய ஆவணங்களை தடய அறிவியல் துறை ஆய்வுக்கு அனுப்பி அந்த ஆவணங்களின் உண்மை தன்மையை ஆராய உத்தரவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

மேலும், வழக்கில் இருந்து தன்னை விடுவிக்கக்கோரி தாக்கல் செய்த மனுவில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்து இன்று உத்தரவு பிறப்பிக்க உள்ள நிலையில், வழக்கில் மீண்டும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைக்க அனுமதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி அல்லி, இவ்விரு மனுக்களுக்கும் பதிலளிக்கும்படி, அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை ஜூலை 18ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.
[16/07, 16:10] sekarreporter1: திருவண்ணாமல் மலையில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை வனம் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை நியமித்து, நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து விரிவான அறிக்கை அளிக்கும்படி தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவில் அமைந்துள்ள மலையில், கிரிவல பாதையின் இருபுறமும் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை அகற்றக் கோரி, வழக்கறிஞர் யானை ராஜேந்திரன், சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் லஞ்சம் கொடுத்து, எந்த அனுமதியுமின்றி கட்டப்பட்டுள்ள இந்த கட்டிடங்களுக்கு குடிநீர் இணைப்பு, மின் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.

புனிதமான கிரிவல பாதையில் மரங்கள் வெட்டப்பட்டு, கழிப்பறைகளும், செப்டிக் டேங்க்-களும் கட்டப்பட்டுள்ளதாகவும், இந்த சட்டவிரோத செயல்களுக்கு வனத்துறை அதிகாரிகளும், நகராட்சி மற்றும் மின்துறை அதிகாரிகளுமே பொறுப்பு எனவும் மனுவில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றாவிட்டால் மலைப்பகுதி லே அவுட் ஆகிவிடும் அபாயம் உள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

மலைப்பகுதியில் கட்டப்பட்டுள்ள சட்டவிரோத கட்டிடங்களை அப்புறப்படுத்துவதுடன், அவற்றுக்கான குடிநீர், மின் இணைப்புகளை துண்டிக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் மற்றும் நீதிபதி முகமது சபீக் அமர்வு, திருவண்ணாமலை மலையே சிவன் தான் எனவும், அங்கு எப்படி கழிப்பிடங்களும், செப்டிக் டேங்க்-களும் கட்ட அனுமதிக்கலாம் எனக் கேள்வி எழுப்பியது.

மேலும், வனத்துறை, வருவாய் துறை அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர் எம்.சி.சுவாமி அடங்கிய குழுவை அமைத்து, மலையில் உள்ள சட்டவிரோத கட்டுமானங்களை நேரில் ஆய்வு செய்து நான்கு வாரங்களில் விரிவான அறிக்கை தாக்கல் செய்யவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
[16/07, 16:10] sekarreporter1: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், வங்கியின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டார்.

கரூர் சிட்டி யூனியன் வங்கியில் உள்ள கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை வழங்க உத்தரவிடக்கோரி செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யபட்ட மனுவை விசாரித்த நீதிபதி அல்லி, கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை செந்தில்பாலாஜி தரப்பிற்கு வழங்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டிருந்தார்.

இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி நீதிபதி அல்லி முன்பாக ஆஜர்படுத்தபட்ட பின் கவரிங் லெட்டர் தொடர்பான ஆவணங்களை கையெழுத்திட்டு பெற்றுக் கொண்டார்.

மேலும், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஜூலை 18ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவிட்டார்.

இதன் மூலம் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 47வது முறையாக நீட்டிக்கபட்டுள்ளது குறிப்பிடதக்கது
[16/07, 17:00] sekarreporter1: நீதிபதி பதவியை, பதவியாக நினைக்காமல், எனக்கிடப்பட்ட பணியாகக் கருதி தொடர்ந்திருக்கிறேன் என, உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவன் தெரிவித்தார்.

உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள, சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி மகாதேவனுக்கு, உயர் நீதிமன்றத்தின் சார்பில் வழியனுப்பு விழா நடத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் பேசிய தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், நீதிபதி மகாதேவன் தனது பணிக்காலத்தில், 97 ஆயிரத்து 116 வழக்குகளில் தீர்வு கண்டுள்ளதாகவும், உச்ச நீதிமன்றத்திலும் அவரது பணி சிறப்பாக அமைய வாழ்த்துவதாகவும் குறிப்பிட்டார்.

பின்னர், நீதிபதி மகாதேவன் ஆற்றிய ஏற்புரையில், வாழ்க்கை பயணத்தில் தொடர்ச்சியான நிகழ்வுகள் அனைவருக்கும் நிகழ்வதுண்டு. இந்த பயணத்தில் அப்படியான நிகழ்வு இந்த நாள் எனக் குறிப்பிட்டார். தேவைகள் இல்லாமல இந்த கட்டிடத்தில் துவங்கிய பயணத்தில் 2013 ல் நீதிபதியானதாகவும், அது இறைவனின் செயல் எனவும் கூறினார்.

ஒரு நீதிபதியாக 10 ஆண்டுகள் கடந்து பணியாற்றிய நிலையில் மனதளவில் எவரையும் புண்படுத்தியதாக நினைவில்லை எனக் குறிப்பிட்ட நீதிபதி மகாதேவன், இளைய வழக்கறிஞர்களையும், மூத்த வழக்கறிஞர்களையும் ஒன்றாகவே பார்த்ததாகவும் குறிப்பிட்டார்.

நீதிபதி பதவியை, பதவி என நினைக்காமல் இடப்பட்ட பணியாக கருதி தொடர்ந்திருப்பதாகக் கூறிய அவர், தனது பணி, இறைவன் ஆணையிட்ட பணி எனக் கூறினார்.
[16/07, 17:04] sekarreporter1: நூறு கோடி ரூபாய் நில மோசடி வழக்கில் முன் ஜாமீன் கோரி, அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனு குறித்து காவல்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரூர் மாவட்டம், தோரணக்கல்பட்டி மற்றும் குன்னம்பட்டியில் தனக்கு சொந்தமான 100 கோடி ரூபாய் மதிப்பிலான 22 ஏக்கர் நிலத்தை அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தனது மனைவி மற்றும் மகளை மிரட்டி மோசடியாகப் பத்திரப்பதிவு செய்து உள்ளதாக கூறி,  வாங்கல் குப்பிச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி. அலுவலகத்தில் புகார்  அளித்திருந்தார்.

இதுதொடர்பாக எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது சகோதரர் சேகர் உள்பட ஏழு பேர் மீது பதியப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரி எம்.ஆர்.விஜயபாஸ்கர் தாக்கல் செய்த மனுவை கரூர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.  இந்நிலையில், எம்.ஆர்.விஜயபாஸ்கரும், அவர்து சகோதரர் சேகரும் முன் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களுக்கும் தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை எனவும், அரசியல் பழிவாங்கும் நோக்கில் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கு தொடர்பான ஆவணங்களை காவல் துறையினர் ஏற்கனவே கைப்பற்றியுள்ள நிலையில், தங்களிடம் விசாரணை நடத்த எந்த அவசியமும் இல்லை என்பதால் முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர்.

இந்த மனு நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் K.M.D. முகிலன் மனு குறித்து பதிலளிக்க அவகாசம் வேண்டுமென கேட்டுக்கொண்டார். இதனையடுத்து, வழக்கு விசாரணையை நாளை மறுநாளுக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
[16/07, 18:57] sekarreporter1: Lllசட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் ஜாபர் சாதிக்கை மூன்று நாட்கள் அமலாக்கத் துறை காவலில் எடுத்து விசாரிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் டில்லி மத்திய போதை பொருள் கடத்தல் தடுப்பு காவல்துறையால் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தி.மு.க முன்னாள் நிர்வாகியுமான ஜாபர் சாதிக், சட்ட விரோத பண பரிவர்த்தனையில் ஈடுபட்டதாக கூறி அமலாக்கத் துறையும் தனியாக வழக்கு பதிவு செய்து, ஜூன் 26ம் தேதி கைது செய்தது.

இந்த வழக்கு தொடர்பாக ஜாபர் சாதிக்-கை 15 நாட்கள் தங்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கோரி அமலாக்க துறை தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி அல்லி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஜாபர் சாதிக் நீதிபதி முன்பு நேரில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கின் விசாரணை அதிகாரி சுனில் சங்கர் யாதவ் ஆஜராகி சாட்சியம் அளித்தார்.

அப்போது ஜாபர் சாதிக் மீது போதை பொருள் கடத்தலில் ஈடுபட்டது தொடர்பாக தடுப்பு வழக்கில் சென்னை மற்றும் மும்பையில் ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும், இந்த வழக்கில் சர்வதேச போதை பொருள் கடத்தலில் பெரும் மூளையாக செயல்பட்டுள்ளதாகவும், இந்த கடத்தல் மூலமாக கிடைத்த சட்ட விரோத பணத்தால் பயனைடைந்த பிரதான பயனாளி என்பதற்கான சாட்சியங்கள் மற்றும் ஆவணங்கள் அமலாக்கத்துறை வசம் உள்ளதாக தெரிவித்தார்.

விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குவதில்லை என்பதால் பிடி வாரண்ட் மூலமாக ஆஜர்படுத்தி உள்ளதாக தெரிவித்த அவர், ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது அவசியமானது என தெரிவித்தார்.

மேலும், அமலாக்கத்துறை தரப்பில் வழக்கறிஞர் என்.ரமேஷ் ஆஜராகி, ஜாபர் சாதிக்கை அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிப்பது மிகவும் முக்கியமானது என்பதால் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தார்.

ஜாபர் சாதிக் தரப்பில் மூத்த வழக்கறிஞர் அபுடு குமார் ஆஜராகி, சென்னை மற்றும் மும்பையில் நிலுவையில் உள்ள வழக்கு விசாரணைக்கு ஜாபர் சாதிக் ஆஜராகி விளக்கம் அளித்ததாகவும், விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கவில்லை என அமலாக்கத்துறை கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் கைது செய்த 15 நாட்களுக்குள் தான் காவலில் எடுக்க முடியும் என்பதால் வழக்கை தள்ளுப்டி செய்ய வேண்டும் என தெரிவித்தார்.

நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜாபர் சாதிக்கிடம் நீங்கள் அமலாக்கத்துறையின் காவலில் செல்ல விரும்புகிறீர்களா என நீதிபதி கேள்வி எழுப்பினார். அதற்கு தனக்கு விருப்பம் இல்லை என்றும் ஏற்கனவே அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்த நிலையில் மீண்டும் காவல் கேட்கிறார்கள் என பதிலளித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், ஜாபர் சாதிக்கை மூன்று நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும் 18ம் தேதி உறவினரை சந்திக்க உத்தரவிட்டு, மீண்டும் 19ம் தேதி மாலை நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.
[17/07, 11:08] sekarreporter1: சென்னையில் உள்ள 700 ஆண்டுகள் பழமையான கோவிலுக்கு தக்கார் நியமித்த இந்து அறநிலைய துறையின் உத்தரவு செல்லும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையில் நெற்குன்றம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி திருக்கோவிலுக்கு இந்து அறநிலைய துறையால் நியமிக்கப்பட்ட தக்கார் நியமனத்தை எதிர்த்து ரவி கே விஸ்வநாதன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அதில், திருக்கோவில் மற்றும் அதன் சொத்துக்கள் அனைத்தும் தனது தாத்தா திரு நீலமேகம் பிள்ளை என்பவரால் கடந்த 1941 ஆம் ஆண்டு கிரயப்பத்திரம் மூலம் வாங்கி இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால் கோவில் தங்கள் குடும்பத்திற்கு சொந்தமானது என்றும் அறநிலையத் துறை இக்கோவிலில் நிர்வாகம் செலுத்த முடியாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது

இந்த வழக்கு நீதிபதி பவானி சுப்புராயன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், அரசு சிறப்பு வழக்கறிஞர் அருண் நடராஜன் ஆஜராகி அறநிலைய துறை தரப்பில் கோவில் செயல் அலுவலர் அளித்த பதில் மனுவை தாக்கல் செய்தார். அதில் நெற்குன்றத்தில் உள்ள திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி திருக்கோவில் 700 ஆண்டுகள் பழமையானவை என்பது அங்கு கிடைத்த கல்வெட்டுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளார்.

இதை அறநிலைய துறை தொல்லியல் துறை ஆய்வாளர் ராமமூர்த்தி உறுதி செய்திருப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்து அறநிலைய சட்டப்படி 700 ஆண்டுகள் பழமையான கோவிலை கிரயப்பத்திரம் மூலமாக வாங்கவோ விற்கவோ முடியாது என்றும் மேலும் தாத்தா பேரனுக்கு எவ்வாறு கிரயப்பத்திரம் எழுதி வைத்தார் என்பது தொடர்பாக முறையான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என அதில் தெரிவித்திருந்தார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி,திருவாலீஸ்வரர் திரிபுரசுந்தரி திருக்கோவிலுக்கு நியமிக்கப்பட்ட தக்கார் நியமனம் செல்லும் என உத்தரவிட்டு இந்த மனு மீதான விசாரணையை ஆக்ஸ்ட் 8 ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
[17/07, 11:09] sekarreporter1: [15/07, 14:56] sekarreporter1: https://x.com/sekarreporter1/status/1812780726049505556?t=l5rYka5PukzfbgfwONLSpg&s=08
[15/07, 14:56] sekarreporter1: “Therefore, the prayers sought for in these writ petitions cannot be granted. However considering the facts and circumstances, this Court is inclined to pass the following directions :-
(i) In future, the Board must ensure that there will not be any ambiguous questions and answers in the examination for any recruitment.
(ii) The Board is directed to verify the draft question papers and tentative answer key before sending them for printing.
(iii) The Board is directed to correct the draft question papers and key answers with the help of experts who are not the original question paper setter.
(iv) The Board is directed to frame guidelines for the experts to arrive correct answers with approved materials.
With the above directions, all the writ petitions are disposed of. Consequently, connected miscellaneous petitions are closed. There shall be no order as to costs.
01.07.2024
(2/2)
Index : Yes/No
Speaking/Non Speaking order Neutral Citation : Yes/No rts 
To
Teachers Recruitment Board,
Dr.MGR Centenary Building
3rd and 4th Floor,
Perasiriyar Anbhazhagan
Kalvivalagam College Road,
Nungambakkam,
Chennai – 600 006. 
G.K.ILANTHIRAIYAN. J,
rts
W.P.Nos.15785, 16225, 16236, 16317, 16323, 16465,
16487, 16568, 16994, 17039, 17063 of 2024
01.07.2024
(2/2)”
https://sekarreporter.com/the-honourable-mr-justice-g-k-ilanthiraiyanw-p-nos-15785-16225-16236-16317-16323-16465-16487-16568-16994-17039-17063-of-2024-and-trb-order/#:~:text=Therefore%2C%20the%20prayers%20sought%20for,2024%0A01.07.2024%0A(2/2)
[17/07, 11:09] sekarreporter1: Crl.O.P. No. 16501 of 2024 for quashing the FIR in Cr Number 126 of 2022 registered against Hindu Munnani activist’s S. Anandaraj, R. Venkatesan R.Ranjith Kumar, N. Raja and A. Govindaraj of V. Kalathur of Perambalur District for allegedly displaying a banner in connection with the 2nd Anniversary of Shri Rama. Gopalan the Founder of Hindu Munnani at V. Kalathur of Perambalaur District . The officials of V. Kalathur Police Station had registered a Case against the Hindu Munnani activist’s under Section 4A (1a) of the Tamil Nadu Open Places Disfigurement Act 1959 as amended in 1986, 1994 and 1998. Under the said law the maximum improvement is three months. Case was registered on 29.09.2022. The police filed a charge sheet in December 2022, which was returned by the Magistrate and therefore no cognizance of the offence was taken within the period of limitation mandated under Section 468(1) of Cr.P.C. The Case was listed as item number 28 before His Lordship Mr. Justice Dr G. Jayachandran. M. Ramamoorthi, Advocate argued on behalf of the petitioners. The Learned Judge allowed the above Crl. O. P. 16501 of 2024 and quashed the impugned FIR in Cr. No 126/2022 on the file of V. Kalathur Police Station in Perambalur District
[17/07, 12:09] sekarreporter1: பொய்யான தகவல்களுடன் வழக்கு தாக்கல் செய்த தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக முன்னாள் ஓட்டுனருக்கு 50 ரூபாய் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தில் ஓட்டுனராக பணியாற்றிய சீனிவாசன், தனது பள்ளிச் சான்றுகள், ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டைகளில் தனது பிறந்த நாளை 1969 எனக் குறிப்பிடுவதற்கு பதில், 1964 எனக் குறிப்பிட்டுள்ளதாகவும், சமீபத்தில் தான் அதை கவனித்ததாகவும், இதை திருத்தக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி போக்குவரத்துக் கழகத்துக்கு உத்தரவிடக் கோரியிருந்தார். இந்நிலையில், சீனிவாசன் கடந்த ஜூன் மாதம் பணி ஓய்வு பெற்றார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பரத சக்கரவர்த்தி, மனுதாரரின் மனுவில் கூறியுள்ள ஆதாரங்களைப் பார்க்கும் போது, ஒரு வயதில் முதல் வகுப்பில் சேர்ந்தது போலவும், 13 வயதில் 1982ல் 12 ம் வகுப்பை முடித்துள்ளது தெரியவந்துள்ளதாகச் சுட்டிக்காட்டி, முழுக்க முழுக்க பொய்யான தகவலை தெரிவித்துள்ளதாகக் கூறி, வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும், மனுதாரருக்கு 50 ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி, அத்தொகையை இரண்டு வாரங்களில் மதுரை காந்தி அருங்காட்சியகத்திற்கு நேரில் சென்று செலுத்தவும் உத்தரவிட்டுள்ளார்.
.
[17/07, 12:56] sekarreporter1: பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதை எதிர்த்த வழக்கில், நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளுர் மாவட்டம், திருமுல்லைவாயில் பகுதியில் 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை, அரசு நிலமாக வகை மாற்றம் செய்து, பின், அந்த நிலத்தை தனியார் நிறுவனத்துக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அந்த நிலத்தை மீண்டும் வனப்பகுதி நிலமாக அறிவிக்கக் கோரி திருமுல்லைவாயிலைச் சேர்ந்த ராஜ்மோகன் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில், வனத்துறைக்கு சொந்த 40.95 ஏக்கர் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி நிலத்தை முன்னாள் எம் எல் ஏ ஞானசேகரன், தன் அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, தனியார் நிறுவனத்துக்கு ஒதுக்கீடு செய்து பல கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். பின்னர் அந்த தொழிற்சாலைகளிடம் இருந்து அந்த இடத்தை தன் பெயருக்கு மாற்றியுள்ளதாகவும் மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

பாதுகாக்கப்பட்ட வனத்துறை நிலத்தை அரசு அனுமதியில்லாமல், வகைமாற்றம் செய்து பட்டா பெற்றது சட்டவிரோதமானது என்பதால் வனத் துறை நிலத்தை மீட்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு, வனப்பகுதி நிலம் எப்படி தனி நபருக்க விற்கப்பட்டது எனக் கேள்வி எழுப்பி, இந்த நிலத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வழக்கறிஞர் ஆணையரை நியமித்து உத்தரவிட்டது.

மேலும், சம்பந்தப்பட்ட நிலத்தை நேரில் சென்று ஆய்வு செய்து புகைப்பட ஆதாரங்களுடன் 15 நாட்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என வழக்கறிஞர் ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை தள்ளிவைத்தனர்.
[17/07, 12:58] sekarreporter1: வெற்றிச்செய்தி

அரியலூர் மாவட்டம் வி.களத்தூர் காவல்நிலையத்தில் இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது தொடரப்பட்ட இரண்டு வழக்குகளை ரத்து (F.I.R quash) செய்ய கோரிஇந்து வழக்கறிஞர் முன்னணி வழக்கறிஞர்களும் மத்திய அரசு வழக்கறிஞர்களுன திரு சுப்பிரமணியம் ,திரு ராம் பிரபு ஆகியோர் மனு தாக்கல் செய்திருந்த நிலையில் இன்று(15/07/24) சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி ஜெயச்சந்திரன் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மத்திய அரசு மூத்த வழக்கறிஞர் திரு ராமமூர்த்தி அவர்கள் ஆஜராகி வாதடினார், இந்து முன்னணி பொறுப்பாளர்கள் மீது தொடரப்பட்ட வழக்கினை ரத்து செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்துமுன்னணி மாநிலத்துணைத்தலைவரும் மூத்த வழக்கறிஞருமான திரு.G.கார்த்திகேயன் இந்து வழக்கறிஞர் முன்னணி சென்னை மாநகர ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்.திரு.மீசை. கார்த்திகேயன் ஆகியோர் வழிகாட்டினர்.மற்றும் இந்து வழக்கறிஞர் முன்னணி வழக்கறிஞர்கள் திரு. வெங்கடேசன், திரு. சுகுமார்
திரு. பத்மராஜன்,
ஆகியோர், உடனிருந்தனர்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version