இன்று காலை 11.00 மணி அளவில் சென்னை மாநகர காவல் ஆணையார் அலுவலகத்தில் நேரில் வந்து கீழ் கண்ட புகார் கொடுக்க உள்ளளேன். புகாரின் சிறு குறிப்பு :- சென்னையில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் வீதி மீறிய 6 காட்சிகள் திரைப்படத்தை வெளியீடு என அனைத்து வகையிலும் நேர்மையற்ற வாணிகம் செய்து

வணக்கம் இன்று காலை 11.00 மணி அளவில் சென்னை மாநகர காவல் ஆணையார் அலுவலகத்தில் நேரில் வந்து கீழ் கண்ட புகார் கொடுக்க உள்ளளேன். புகாரின் சிறு குறிப்பு :- சென்னையில் உள்ள திரையரங்குகளில் கூடுதல் கட்டணம் வசூல் மற்றும் வீதி மீறிய 6 காட்சிகள் திரைப்படத்தை வெளியீடு என அனைத்து வகையிலும் நேர்மையற்ற வாணிகம் செய்து வரும் திரையரங்கு நிர்வாகம் மற்றும் உரிமையாளர்கள் வரும் 24.02.2022 அன்று வெளியாகும் வலிமை திரைப்படத்தை திரையீடுகின்றார்கள். அதில் முக்கிய பங்கு வகிக்கும் சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி சினிமா திரையரங்குகளின் வெளியீடப்படுகின்றது.
நான் 20,02,2022 அன்று book my Show என்ற இணையதளம் மூலம் ரூ.395,50/- கொடுத்து 24.02.2022 அன்று மாலை 08.40 மணிக்கு திரையீடும் திரைப்படத்திற்கு டிக்கெட் புக்கிங் செய்து உள்ளேன். தமிழக அரசு அரசாணை எண். 762 தேதி 16.10.2017 அன்று வெளியீட்டு உள்ள கட்டணத்தின் படி ரோகினி திரையரங்கு நிர்வாகம் தமிழக அரசாணைப்படி கட்டணம் வசூல் செய்யவில்லை என்பது உறுதியாக தெரியவருகின்றது.
சென்னை கோயம்பேட்டில் உள்ள ரோகினி சினிமா திரையரங்கு நிர்வாகம் / உரிமையாளர் தங்களின் திரையரங்குக்கு வரும் நுகர்வோரை மோசடி / ஏமாற்றி நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூல் செய்து உள்ளார்கள். புதிய திரைப்படம் வெளியீடும் போது சில கோடி ரூபாய் கொள்ளையடிக்கின்றார்கள். மேலும், அரசு அனுமதி பெறாமல் நள்ளிரவு காட்சிகளையும் திரையீட திட்ட மிட்டு உள்ளார்கள்.
மேலும், மீது உரிய விசாரணை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கின்றேன்.
ஐயா / அம்மா அவர்களே, என்னுடைய மனு மீது உரிய விசாரணை செய்து ரோகினி சினிமா திரையரங்கு நிர்வாகத்தினார் அரசு நிர்ணயம் செய்த கட்டணத்தை விட கூடுதல் கட்டணம் வசூல் செய்த திரையரங்கு மீது சட்ட பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பணிந்து கேட்டுக்கொள்கின்றேன்.,
நன்றி இப்படிக்கு

புகார் மனுவுடன் இணைக்கப்பட்டு
உள்ள ஆவணங்கள்
1. ஆன்லைன் டிக்கெட்
2. தமிழக அரசாணை நகல்

You may also like...