இன்று (24.03.2023) மாண்புமிகு நீதிபதிகள் திரு. மஹாதேவன், திரு ஆதிகேசவலு அமர்வு முன்பாக கோயில் ஆர்வலர் டி ஆர் ரமேஷ் தொடுத்திருந்த கோயில்கள் நிதி கொண்டு அறநிலையத்துறை கல்லூரிகள் தொடங்குவதை எதிர்த்து பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் தொடுத்திருந்த இரண்டாவது கூடுதல் அஃபிடவிட் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இன்று (24.03.2023) மாண்புமிகு நீதிபதிகள் திரு. மஹாதேவன், திரு ஆதிகேசவலு அமர்வு முன்பாக கோயில் ஆர்வலர் டி ஆர் ரமேஷ் தொடுத்திருந்த கோயில்கள் நிதி கொண்டு அறநிலையத்துறை கல்லூரிகள் தொடங்குவதை எதிர்த்து பொது நல வழக்கு விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் மனுதாரர் தொடுத்திருந்த இரண்டாவது கூடுதல் அஃபிடவிட் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. இந்தக் கூடுதல் மனுவில் மனுதாரர் ரமேஷ் கோயில் பணத்தை அறநிலையத்துறை, அரசு செலவுகளுக்கு எடுப்பதை ஆவணப்படுத்தியுள்ளதாகவும், அதனால் சிறப்பு அமர்வு சில உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

1. முதலாவதாக, ரூ. 50 லட்சம் மேல் ஆண்டு வருமானம் உள்ளக் கோயில்களில் பட்டய கணக்காளர்கள் மூலம் கோயில் சொத்துக்கள், பணம் கோயில் நோக்கங்களுக்கு அல்லாமல் செலவு செய்யப்பட்டதை ஆய்வு செய்து அறிக்கை வேண்டும்.

2. இந்து சமய பொது நல நிதியையும் ஆய்வு செய்து கோயில்களில் இருந்து பொது நல நிதி அறங்காவலர்கள் தாமாக முன் வந்து தந்ததா, பொது நல நிதியை அறநிலையத்துறை சட்டம் அனுமதித்த செயல்களுக்கு மட்டுமே செலவு செய்யப்பட்டதா, சட்ட வழிமுறை பின்பற்றி பொது நல கோரிக்கைகள் ஆணையரால் அங்கீகரிக்கப்பட்டனவா என்பதை பட்டய கணக்களார்கள் சான்றளிக்க வேண்டும்.

3. பட்டய கணக்காளர்கள் கண்டுபிடுத்துள்ளத் தவறுகளை 7.95% சதவிகிதம் வட்டியுடன் ஈடு செய்ய வேண்டும்

4. கோயில் பணத்தை துஷ்ப்ரயோகம் செய்த அறநிலையத்துறை அதிகாரிகள் மீதி காவல்துறை IG தலைமையில் புலன் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்

5. வேலூர் சின்னி ராமஸ்வாமி கட்டளை நிலத்தில் வேலூர் இந்து சமய இணை ஆணையர் அலுவலகம் கட்டக் கூடாது.

மனுதாரர் கூறியவற்றை கேட்ட நீதிபதிகள் இது குறித்து அரசுத் தரப்பில் என்ன பதில் தாக்கல் செய்யப்பட்டது என்று கேட்டார்கள்.
அதற்க்கு அரசு வழக்கறிஞர் 4 வாரம் அவகாசம் கேட்டார். நீதிபதிகள் மனுதாரர் 31.01.2023 அன்று தாக்கல் செய்த மனுவிற்கு
இது நாள் வரை பதில் தாக்கல் செய்யவில்லை. இன்னும் 4 வாரங்கள் கேட்கிறீர்களே என்று சொல்லி 2 வாரங்கள் அவகாசம் அளித்தனர்

மனுதாரர் ரமேஷ், சமயபுரம் மாரியம்மன் கோயிலில் மிகப் பெரிய அளவில் வங்கி இருப்பு குறைவதாகத் தெரிகிறது. இது குறித்து மேலும்
ஒரு மனு தாக்கல் செய்துள்ளேன் என்று சொன்னார். அதைப் பார்வையிட்ட நீதிபதிகள் அதற்கும் அரசு பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.

வழக்குகள் இரு வாரங்களில் மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளன.

You may also like...