SEKAR REPORTER

இராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன் அவர்கள், பீகார் மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி (BC மற்றும் EBC) மக்கள் தொகை 85% ஆக உள்ளது.. மேலும், ஜன்ஹித் அபியான் vs இந்திய அரசு ( EWS இடஒதுக்கீடு ) வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு 50% உச்சவரம்பு என்பது புனிதமானது அல்ல,

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

பீகார் மாநிலத்தில் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசிக்கு 65% இடஒதுக்கீடு வழங்கிய பீகார் இடஒதுக்கீடு திருத்தச் சட்டம் 2023 ஐ ரத்து செய்த பாட்னா உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து இராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் திரு. மனோஜ் குமார் ஜா அவர்கள் தாக்கல் செய்த எஸ்.எல்.பி மனு இன்று விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன் அவர்களின் வாதங்களைக் கேட்ட மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி அமர்வு, எஸ்.எல்.பி மனு மீது நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கில், இராஷ்டிரிய ஜனதா தளம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன் அவர்கள், பீகார் மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி (BC மற்றும் EBC) மக்கள் தொகை 85% ஆக உள்ளது.. மேலும், ஜன்ஹித் அபியான் vs இந்திய அரசு ( EWS இடஒதுக்கீடு ) வழக்கில் மாண்புமிகு உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு 50% உச்சவரம்பு என்பது புனிதமானது அல்ல, அதை மீறலாம் என்று கூறியது.. தற்போதைய வழக்கிற்கு அது முற்றிலும் பொருந்தும் என்று சுட்டிக்காட்டினார்.
இந்த இடஒதுக்கீடு திருத்தச் சட்டமானது, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கான மொத்த இடஒதுக்கீட்டை 65% ஆக உயர்த்தியது.
மாநில ஒதுக்கீட்டு இடங்கள் தொடர்பான நீல் ஆரேலியோ நுன்ஸ் vs இந்திய அரசு வழக்கில், உச்ச நீதிமன்றம் ஏற்கனவே இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான கதவுகளைத் திறந்துவிட்டதாகவும், பீகார் மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி பிரிவினருக்கும் அதே நிலைப்பாடு பின்பற்றப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த வழக்கினை விசாரித்த மாண்புமிகு தலைமை நீதிபதி, மாண்புமிகு நீதிபதி திரு. பர்திவாலா மற்றும் மாண்புமிகு நீதிபதி திரு.மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வானது, மூத்த வழக்கறிஞர் திரு.பி.வில்சன் அவர்களின் வாதங்களைக் கேட்ட பின்னர், இராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி தாக்கல் செய்த எஸ்.எல்.பி தொடர்பாக பிரதிவாதிகள் அனைவருக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version