இரும்பு கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பான புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய சந்தை போட்டி ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, இரும்பு கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்பது தொடர்பான புகார் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய இந்திய சந்தை போட்டி ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோயம்புத்தூர் ஒப்பந்ததாரர்கள் சங்கம் தொடர்ந்துள்ள வழக்கில், கடந்த 6 மாதங்களாக இரும்புக் கம்பிகள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களான டாடா, ஜெ.எஸ்.டபிள்யூ, செயில், விசாகே, திருமலா, காமாட்சி, அக்னி, இந்த்ரோலா, கிஸ்கோ ஆகிய இரும்புக் கம்பி தயாரிக்கும் நிறுவனங்கள், செயற்கை தட்டுப்பாட்டை உருவாக்கி, கம்பிகளை கூடுதல் விலைக்கு விற்று, சட்டவிரோதமாக லாபம் ஈட்டி வருவதாகக் குற்றம்சாட்டியுள்ளது.

இதனால் கட்டுமான துறையில் உள்ள ஒப்பந்ததாரர்கள் மட்டுமல்லாமல், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்ய சிபிஐ-யிடம் மார்ச் 6ஆம் தேதி மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனு நீதிபதி பவானி சுப்ராயண் முன்பு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இளங்கோவன், மனுதாரர் சங்கத்தின் புகார் மீது நடவடிக்கை எடுக்காததால் இது சம்பந்தமாக வழக்கு பதிந்து விசாரிக்க சிபிஐ-க்கு உத்தரவிட வேண்டுமென வாதிட்டார்

இந்த வாதத்தைக் கேட்ட நீதிபதி, மனுதாரர் சங்கத்திம் புகார் குறித்து விசாரித்து
அறிக்கை தாக்கல் செய்ய இந்திய சந்தை போட்டி ஆணையத்திற்கு (competition commission of India) உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

You may also like...