உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு பி வள்ளியப்பன் இருக்கும் சில விதிகளை கோடிட்டு காயிது காட்டி 48 நாள் அபிஷேகம் செய்வதை சரி என்று கூறி மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்ட சில வாதங்களை மேற்கோள்காட்

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்குவது பழனி முருகன் கோயில் ஆகும். இந்த கோயிலின் கும்பாபிஷேகம் ஆனது கடந்த வெள்ளிக்கிழமை அன்று 26.01.2023 அன்று சீரும் சிறப்புமாக ஆமக மந்திரங்கள் ஓதி நடைபெற்றது.

பொதுவாக கும்பாபிஷேக முடிந்த பின் 48 நாட்களுக்கு தொடர்ந்து பால், தைலம் கொண்டு மூர்த்திக்கு அபிஷேகம் செய்து 48 வது நாள் மகா மண்டலாபிஷேகம் செய்வது ஆகம முறையில் வழக்கமாய் உள்ளது.

ஆனால் பழனி கோயிலில் 3 வது நாளிலேயே மண்டலாபிஷேகம் பூர்த்தி செய்து தைப்பூச விழா கொண்டாடப்படுவது என முடிவு செய்யப்பட்டது.
இதனை எதிர்த்து மனுதாரர் தரப்பில் வழக்கு தொடுக்கப்பட்டு கும்பாபிஷேகம் முடிந்த தேர்தலில் இருந்து தொடர்ந்து 48 நாட்களுக்கு மண்டலபிஷேகமும் 48 வது நாள் மண்டல அபிஷேக பூர்த்தியும் செய்ய வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது இவ்வழக்கில் மனுதாரர் தரப்பில் ஆஜரான சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் திரு பி வள்ளியப்பன் இருக்கும் சில விதிகளை கோடிட்டு காயிது காட்டி 48 நாள் அபிஷேகம் செய்வதை சரி என்று கூறி மேலும் உச்ச நீதிமன்ற தீர்ப்பில் கூறப்பட்ட சில வாதங்களை மேற்கோள்காட்டி அரசு அறநிலையத்துறையில் செய்வார்கள் விதிக்கப்பட்டுள்ள விதிகளை பின்பற்றிய பூஜை முறைகளை தொடர வேண்டும் என வாதிட்டார் எதிர்மனுதாரர் தரப்பில் அட்வகேட் அரசு தலைமை வழக்கறிஞர் திரு சண்முகசுந்தரம் அவர்கள் ஆஜராகி தைப்பூசம் விழாவானது 48 நாட்களுக்குள் குறிக்கிடுவதால் மண்டலாபிஷேகம் செய்வதில் சில விதிகள் உட்பட்டு மூன்று நாட்களில் முடிக்க முடிவு செய்யப்பட்டது என்று வாதிட்டார்.

அதனைத் தொடர்ந்து இரு தரப்பினரும் தங்களுக்குள் சமரச பேசி கொண்டு இந்த வழக்கினை தீர்த்து கொள்ள முடிவு செய்தனர்.

அதன்படி
தொடர்ந்து 48 நாட்களுக்கு 11 கலசம் கொண்டு தினமும் முருகனுக்கு அபிஷேகம் செய்வது.
மேலும் 48 வது நாள் அன்று 1008 சங்காபிஷேகம் கொண்டு அபிஷேகம் செய்வது.
தைப்பூச திருவிழாவினை தொடந்து செய்துகொள்வது.

You may also like...