SEKAR REPORTER

கொலை வழக்கில் சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை அனுபவிப்பவரை மீட்பது தொடர்பாக மத்திய அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

கொலை வழக்கில் சவுதி அரேபியாவில் ஆயுள் தண்டனை அனுபவிப்பவரை மீட்பது தொடர்பாக மத்திய அரசு மட்டுமே நடவடிக்கை எடுக்க முடியும்  சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன் என்பவர் சவுதி அரேபியாவில் வேலை பார்த்த போது, கேரளாவைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

சவுதி அரேபியாவில் கடந்த 16 ஆண்டுகளாக தண்டனை அனுபவிக்கும் பாண்டுரங்கனை,  மீட்க  சட்டப்படியான உதவிகளை கேட்டு மத்திய வெளிவிவகாரத் துறை செயலாளர், தமிழ்நாடு உள்துறை, பொதுத்துறை செயலாளர்களுக்கு உத்தரவிடக் கோரி அவரது தாய் சரோஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், வி.சிவஞானம் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சிறைக் கைதிகளை பரஸ்பரம் மாற்றிக்கொள்ளும் ஒப்பந்தம் இந்தியா- சவுதி அரேபியா இடையே இருப்பதாகவும் அதன் மூலம் பாண்டுரங்கனை இந்தியாவுக்கு நாடு கடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்கலாம் என வாதிட்டார்.

மத்திய வெளியுறவுத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், பாண்டுரங்கனுக்கு தேவையான தூதராக ரீதியிலான உதவிகள் அனைத்தும் செயப்பட்டதாகவும், விடுதலை பெறுவது தொடர்பாக உயிரிழந்தவரின் வழக்கறிஞர்களை அணுகலாம் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, சிறைக் கைதிகளை பரஸ்பரம் மாற்றிக்கொள்வது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் இருந்தாலும் அதனை செயல்படுத்துமாறு தாங்கள் உத்தரவிட முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பாக நிவாரண பெறுவதற்கு வெளியுறவுத்துறை அமைச்சகத்தை அணுகலாம் எனக்கூறிய நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version