கோயில்களில் ஆகமவிதிகளை கண்டறிவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.* for temple adv valliappan

*கோயில்களில் ஆகமவிதிகளை கண்டறிவது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறை அனுப்பிய சுற்றறிக்கைக்கு ஐகோர்ட் தடை விதித்துள்ளது.*

அறநிலையத்துறை உயர்மட்ட ஆலோசனை குழு உறுப்பினர் சத்தியவேல் முருகன் 50 கேள்விகளுடன் சுற்றறிக்கை தயாரித்திருந்தார். 50 கேள்விகளுக்கும் விடையளிக்க அறநிலையத்துறை அனைத்து கோயில்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியது. திரு.சத்திய வேல் முருகன் அவர்களின் 50 கேள்விகள் சுற்றறிக்கையை ரத்து செய்யக்கோரியும் மற்றும் ஆகம கோயில் எது என்று கண்டறியும் குழுவில் இடம்பெறாது செய்யவும் தொடரப்பட்ட வழக்கு ஆனது இன்று உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி பாரத சக்ரவர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த வழக்கில் சிவாச்சாரியார் கூட்டமைப்பு சங்க அட்வகேட் திரு வள்ளியப்பன் அவர்கள் திரு. TR ரமேஷ் அவர்கள் சார்பாக ஆஜர் ஆனார்.

தலைமை நீதிபதியின் முன்பு வாதாடிய திரு.வள்ளியப்பன் அவர்கள், இந்த வினாத்தாள் அவசியம் இல்லாதது என்று கூறி தடை உத்தரவு கோரினார்.

அரசு தரப்பில் அட்வகேட் ஜெனரல் திரு சண்முகம் சுந்தரம் ஆஜராகி இந்த கேள்விகள் வேறு சில நோக்கத்திற்காக கேட்கப்பட்டது என்றும் மிகவும் அவசியமானது என்று வாதிட்டார்.

வழக்கை விசாரித்த சென்னை நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள், சத்தியவேல் முருகனார் கேள்விகள் அடங்கிய சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இது சம்பந்தமாக அரசு மற்றும் திரு சத்தியவேல் முருகன் அவர்களுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பவும் ஆணைப் பிறப்பித்தார்.

You may also like...