SEKAR REPORTER

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கை ரத்து செய்த உத்தரவு தொடர்பாக அமலாக்கத்துறையிடம் சில விளக்கம் பெற உள்ளதால் வழக்கின் விசாரணையை ஐகோர்ட் ஒத்திவைத்துள்ளது

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

கடந்த 2006-2011ம் ஆண்டுகளில் திமுக ஆட்சி காலத்தில், சென்னை திருவான்மியூரில் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய வீட்டுமனையை முறைகேடாகப் பெற்றதாக ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜாபர் சேட், அவரது மனைவி உள்ளிட்டோருக்கு எதிராக லஞ்ச ஒழிப்புத் துறை 2011ம் ஆண்டு ஊழல் வழக்கை பதிவு செய்தது.

இந்த வழக்கின் அடிப்படையில், சட்ட விரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ், ஜாபர் சேட் மீது அமலாக்கத் துறை 2020ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஜாபர் சேட் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சிவஞானம் அமர்வு, ஜாபர் சேட்-டுக்கு எதிரான வழக்கு ஏற்கனவே ரத்து செய்யப்பட்டுள்ளதால், அமலாக்கதுறை பதிவு செய்த வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது எனக் கூறி அவருக்கு எதிரான அமலாக்கத்துறை வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சில விளக்கங்களை அமலாக்கப்பிரிவிடம் இருந்து பெற வேண்டியுள்ளதாகக் கூறி, இந்த வழக்கை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் சக்திவேல் அமர்வு, வழக்கின் விசாரணையை ஆகஸ்ட் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version