SEKAR REPORTER

செந்தில் பாலாஜி தரப்பில், advts gowtham and barani kumar ,விசாரணை நீதிமன்றங்களுக்கு எந்த காலவரம்பும் நிர்ணயிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் order / gjj order 4 months time PJ

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கை விசாரித்து முடிக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு நான்கு மாத அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த ஆண்டு ஜூன் 14ம் தேதி கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், ஜாமீன் வழங்க மறுத்ததுடன், வழக்கை மூன்று மாதங்களில் விசாரித்து முடிக்க வேண்டும் என கடந்த பிப்ரவரி மாதம் உத்தரவிட்டிருந்தது.

முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை இன்னும் தொடங்காத நிலையில், விசாரணையை முடிக்க மேலும் 4 மாதம் அவகாசம் வழங்க உத்தரவிடக்கோரி முதன்மை அமர்வு நீதிமன்றம் சென்னை உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் வழக்கு விசாரணை நீதிபதி ஜி.ஜெயசந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது செந்தில் பாலாஜி தரப்பில், விசாரணை நீதிமன்றத்துக்கு காலவரம்பு நிர்ணயித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மறுநாள், விசாரணை நீதிமன்றங்களுக்கு எந்த காலவரம்பும் நிர்ணயிக்க கூடாது என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, உச்ச நீதிமன்ற உத்தரவை மதிப்பதாகக் குறிப்பிட்ட நீதிபதி, மனு மீது மனுகள் தாக்கல் செய்யாமல் விசாரணையை முடிக்க ஒத்துழைக்க வேண்டும் எனவும், உச்ச நீதிமன்ற உத்தரவை சாதகமாகக் காட்ட கூடாது எனவும் தெரிவித்தார்.

பின்னர், சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, நான்கு மாத அவகாசம் கோரியிருக்கிறார். அதற்குள் வழக்கை முடிக்கும் திறமை அவருக்கு உள்ளது எனத் தெரிவித்த நீதிபதி ஜெயச்சந்திரன், செந்தில் பாலாஜி மீதான வழக்கை விசாரித்து முடிக்க நான்கு மாத கால அவகாசம் வழங்கி உத்தரவிட்டார். அதற்குள் வழக்கின் விசாரணையை முடிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version