சென்னை மதுரவாயல் – வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு விட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை மதுரவாயல் – வாலாஜா இடையிலான தேசிய நெடுஞ்சாலை சீரமைக்கப்பட்டு விட்டதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னை – பெங்களூரு தேசிய
நெடுஞ்சாலையில், மதுரவாயல் – வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை முறையாக பராமரிக்காதது தொடர்பாக,
தாமாக முன் வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்து கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், நெடுஞ்சாலையை சீரமைக்கும் வரை அங்குள்ள இரண்டு சுங்கச்சாவடிகளில் 50 சதவீதம் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும் என கடந்த 2019 ம் ஆண்டு உத்தரவிட்டிருந்தது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ச்சியாக அங்கு 50 சதவீத சுங்ககட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தபோது,
நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மதுரவாயல் வாலாஜா இடையிலான நெடுஞ்சாலை தற்போது சீரமைக்கப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

அதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இந்த வழக்கை முடித்து வைத்தாதன் மூலம் கடந்த இரண்டு ஆண்டுகளாக 50 சதவீத சுங்கக் கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வந்த இந்த இரு சுங்கச்சாவடிகளில், இனி 100 சதவீத சுங்க கட்டணம் வசூலிக்கப் படலாம் என எதிர்பார்க்க படுகிறது.

You may also like...