ஜோ மைக்கில் ப்ரவீன் என்பவரை மிரட்டிய விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்

ஜோ மைக்கில் ப்ரவீன் என்பவரை மிரட்டிய விவகாரத்தில்
நடிகை மீரா மிதுன் மீது எழும்பூர் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்

சினிமா துணை நடிகையும், மாடலுமான மீராமிதுன் தனது சமூக வலைத்தள கணக்குகளில் சர்ச்சைக்குரிய வகையில் பேசி வந்தார். பட்டியல் சமூகத்தினர் குறித்த அவர் வெளியிட்டிருந்த வீடியோ பேச்சு சர்ச்சையான நிலையில், அது தொடர்பாக கொடுக்கப்பட்ட புகாரில் வன்கொடுமை தடுப்புச் சட்டம் உட்பட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு சென்னை சைபர் கிரைம் போலீசாரால் கேரளாவில் வைத்து நடிகை மீராவின் கைது செய்யப்பட்டார். இதையடுத்து புழல் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்த நடிகை மீரா மிதுனை சென்னை எம்கேபி நகர் போலீசார் மற்றொரு வழக்கில் நேற்று கைது செய்தனர். கடந்த 2020-ஆம் ஆண்டு ஜோ மைக்கேல் என்பவர் கொடுத்த புகாரில் பதிவு செய்யப்பட்ட வழக்கில்,தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்டதற்கான வாரண்ட் ஆணையுடன் புழல் சிறையில் இருந்து நடிகை மீரா மிதுனை கொண்டு வந்து சென்னை எழும்பூர் 10-வது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். மேலும், இந்த வழக்கு தொடர்பான விசாரணை நடத்துவதற்கு இரண்டு நாள் காவல் கேட்டு எம்கேபி நகர் போலீசார் மனு தாக்கல் செய்தனர்.மேலும் இந்த வழக்கில் ஜாமின் கேட்டும் மீராமிதுன் மனுதாக்கல் செய்துள்ளனர்.

இந்த இரண்டு மனுவும் விசாரணைக்கு நீதிபதி லட்சுமி முன் விசாரணைக்கு வந்தது.அப்போது எம்.கே.பி நகர் போலிசார் தரப்பில் ஜாமின் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.மேலும் வழக்கு பதிவு செய்யப்பட்டு பல முறை சம்மன் அனுப்பியும் ஆஜராகததால், இரண்டு நாள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரினர்.

நடிகை மீரா மிதுன் தரப்பில் விசாரணைக்கு ஒத்துழைப்பதாக கூறப்பட்ட உத்தரவாதத்தின் அடிப்படையில் ,சென்னை எழும்பூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமின் வழங்கியுள்ளது.மேலும் காவலில் எடுத்து விசாரிக்க கோரிய போலிசாரின் மனுவையும் நீதிமன்றம் தள்ளுபடி செய்ததது. இதனையடுத்து பட்டியல் இன மக்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் நடிகை மீரா மிதுன் நீதிமன்ற காவலில் இருப்பதால் மீண்டும் புழல் சிறைக்கு போலீசார் அழைத்துச் சென்றுள்ளனர்.

இந்நிலையில் கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இதய ஜோ மைக்கேல் பிரவீன் என்பவர், தன்னையும் தன் குடும்பத்தினரையும் நடிகை மீரா மிதுன் தாக்க முயல்வதாக கொடுக்கப்பட்ட புகாரில் எழும்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் போலீசார் எழும்பூர் 14-வது செவ்வியல் நீதிமன்றத்தில் நடிகை மீரா மிதுன் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். சென்னையை பொருத்தவரையில் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் ஒரு வழக்கு, எழும்பூர் காவல்நிலையத்தில் இரண்டு வழக்கு, எம்கேபி நகர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கு, சென்னை மத்திய இப்பிரிவில் ஒரு வழக்கு என மொத்தம் 5 வழக்குகள் நடிகை மீரா மிதுன் மீது உள்ளது. இதில் 2 வழக்குகளில் நடிகை மீரா மிதுன் மீது போலீசார் கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like...

Call Now ButtonCALL ME