திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் விதிகளுக்கு உட்பட்டு தான் கட்டபடுகிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே பணி முடிப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் அமைந்துள்ள சைவ சமய அறக்கட்டளையான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதின மடத்துக்கு சொந்தமாக திருக்கடையூரில் 14 ஆயிரம் சதுர அடியில் திருமண மண்டபம் கட்டபட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமசந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு புறம்போக்கு நிலங்களில் இந்த திருமண மண்டபம் கட்டபடுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தருமபுர ஆதீனம் தரப்பில், அனைத்து அனுமதியும் பெற்றுதான் திருமண மண்டபம் கட்டபடுவதாக தெரிவிக்கபட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறப்பட்டு திருமண மண்டபம் கட்டுப்படுகிறதா என்பதை கிராம தனி அலுவலர் கண்காணிக்க வேண்டுமெனவும், விதிகளுக்கு உட்பட்டும், அனுமதிக்கு உட்பட்டு தான் கட்டபடுகிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே பணி முடிப்பு சான்றிதழ் வழங்கவேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

திருக்கடையூரில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருமண மண்டபம் விதிகளுக்கு உட்பட்டு தான் கட்டபடுகிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே பணி முடிப்பு சான்றிதழ் வழங்க வேண்டுமென தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் அமைந்துள்ள சைவ சமய அறக்கட்டளையான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதின மடத்துக்கு சொந்தமாக திருக்கடையூரில் 14 ஆயிரம் சதுர அடியில் திருமண மண்டபம் கட்டபட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமசந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு புறம்போக்கு நிலங்களில் இந்த திருமண மண்டபம் கட்டபடுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தருமபுர ஆதீனம் தரப்பில், அனைத்து அனுமதியும் பெற்றுதான் திருமண மண்டபம் கட்டபடுவதாக தெரிவிக்கபட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறப்பட்டு திருமண மண்டபம் கட்டுப்படுகிறதா என்பதை கிராம தனி அலுவலர் கண்காணிக்க வேண்டுமெனவும், விதிகளுக்கு உட்பட்டும், அனுமதிக்கு உட்பட்டு தான் கட்டபடுகிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே பணி முடிப்பு சான்றிதழ் வழங்கவேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர். தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

மயிலாடுதுறை மாவட்டம், தருமபுரத்தில் அமைந்துள்ள சைவ சமய அறக்கட்டளையான தருமபுரம் ஆதீனம் அமைந்துள்ளது. இந்த ஆதின மடத்துக்கு சொந்தமாக திருக்கடையூரில் 14 ஆயிரம் சதுர அடியில் திருமண மண்டபம் கட்டபட்டு வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராமசந்திரன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நலவழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அரசு புறம்போக்கு நிலங்களில் இந்த திருமண மண்டபம் கட்டபடுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தருமபுர ஆதீனம் தரப்பில், அனைத்து அனுமதியும் பெற்றுதான் திருமண மண்டபம் கட்டபடுவதாக தெரிவிக்கபட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட தலைமை நீதிபதி அமர்வு, உள்ளாட்சி அமைப்புகளிடம் அனுமதி பெறப்பட்டு திருமண மண்டபம் கட்டுப்படுகிறதா என்பதை கிராம தனி அலுவலர் கண்காணிக்க வேண்டுமெனவும், விதிகளுக்கு உட்பட்டும், அனுமதிக்கு உட்பட்டு தான் கட்டபடுகிறதா என்பதை ஆய்வு செய்த பிறகே பணி முடிப்பு சான்றிதழ் வழங்கவேண்டும் என உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

You may also like...