தீர்மானம் செல்லும் Inbadura Former i Mla: *அதிமுக பொதுக்குழு செல்லும்! ஓபிஎஸ் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!*

[2/23, 14:20] Inbadura Former i Mla: *அதிமுக பொதுக்குழு செல்லும்! ஓபிஎஸ் அப்பீல் மனுவை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு!*

கடந்த ஜுன் 11ம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவின் தீர்மானங்களுக்கு தடைவிதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த அப்பீ்ல் மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி – கிரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று தீர்ப்புக்காக ஒத்தி வைக்கப்பட்டிருந்தது.

அதிமுக பொதுக்குழுவை கூட்ட ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பளர் இருவரின் கையெழுத்தும் அவசியம்.மேலும் பொதுக்குழுவை கூட்ட 15 நாள் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கவேண்டும் இந்த இரு சட்டவிதிகளையும் கடைபிடிக்காததால் ஜுலை 11 அதிமுக பொதுக்குழு செல்லாது! என்பதுதான் ஓபிஎஸ் தரப்பின் வழக்கு!

இதை ஏற்றுக்கொண்ட சென்னை உயர்நீதிமன்ற தனி நீதிபதி ஜுலை 11 நடைபெற்ற அதிமுக பொதுக்குழு செல்லாது என அறிவித்தார்.

தனி நீதிபதியின் இந்த தீர்ப்பினை எதிர்த்து அதிமுக சார்பில் எடப்பாடியார் சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்சில் அப்பீல் செய்தார். இந்த அப்பீல் மனுவை விசாரித்த டிவிஷன் பெஞ்ச் தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து தீர்ப்பளித்தனர்.15 நாள் நோட்டீஸ் எழுத்துப்பூர்வமாக இருக்கவேண்டும் என அதிமுக சட்டவிதிகளில் எங்கும் கூறப்படவில்லை. மேலும் பொதுக்குழுவை கூட்ட இருவரின் கையெழுத்து அவசியம் என்பதும் ஏற்க தக்கது அல்ல! இருவருக்குள்ளும் பரஸ்பரம் ஒத்துழைப்பு இல்லாதபோது கட்சி முடங்கிவிடும். எனவே சட்டவிதிகளின்படி பொதுக்குழு உறுப்பினர்களில் ஐந்தில் ஒரு பங்கினர் கையொப்பமிட்டு கோரிக்கை அளித்தாலே பொதுக்குழுவை கூட்டலாம் என்பதால் ஜுலை 11 பொதுக்குழு செல்லும்.அன்று நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என தீர்ப்பளித்தது.

டிவிஷன் பெஞ்சின் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓபிஎஸ் தரப்பினர் தாக்கல் செய்த அப்பீல் மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் இன்று அளித்த தீர்ப்பின் சாராம்சம் பின் வருமாறு:−

அதிமுக சட்டவிதிகளின்படி கூட்டப்பட்ட ஜுலை 11 அதிமுக பொதுக்குழு செல்லும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் டிவிஷன் பெஞ்ச் சரியாக அளித்துள்ள தீர்ப்பில் நாங்கள் தலையிட விரும்பவில்லை!

எனவே சட்டவிதிகளின்படி கூட்டப்பட்ட ஜுலை 11 அதிமுக பொதுக்குழு செல்லும்!

எனவே ஓபிஎஸ் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து அப்பீல் மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்துள்னர்.

அதிமுக பொதுக்குழு செல்லும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதால் பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும் செல்லும் என்பதால்

*ஓபிஎஸ் உள்ளிட்டவர்களை அதிமுக பொதுக்குழு நீக்கியது செல்லும்!

*எடப்பாடியாரை இடைக்காலப் பொதுச்செயலாளராக பொதுக்குழு தேர்ந்தெடுத்தது செல்லும்!

*கழக பொருளாளர் திண்டுக்கல் சீனிவாசன், தலைமை நிலைய செயலாளர் வேலுமணி உள்ளிட்டவர்களின் நியமனங்களும் செல்லும்!

 

*ஐ.எஸ்.இன்பதுரை*

கழக சட்ட ஆலோசனைக்குழு உறுப்பினர்
[2/23, 14:46] sekarreporter1: 💐

You may also like...