நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

நாகை மாவட்டம் திருக்கண்ணபுரம் சவுரிராஜபெருமாள் கோவிலின் பிரம்மோற்சவ விழா அடுத்த மாதம் நடத்தப்படும் என தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

சென்னையை சேர்ந்த வெங்கடேஷ் சவுரிராஜன் என்பவர் தாக்கல் செய்திருந்த மனுவில், ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் நிலையில், கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக 2020, 2021ஆம் ஆண்டுகளில் சவுரிராஜ பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் நடத்தபடவில்லை என தெரிவித்திருந்தார்.
கோவில் மத விவகாரங்களில் தலையிட அரசுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், ஆகம விதிகளில் கூறியுள்ள படி எதிர்காலத்தில் உற்சவங்களை நடத்த வைணவ சமயத்தை சேர்ந்த ஜீயர்கள்,ஸ்தலத்தார்கள் உள்ளிட்டோர் அடங்கிய உற்சவ குழுவை அமைத்து பிரமோற்சவத்தை நடத்த உத்தரவிட வேண்டும் எனவும் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு அமர்வில் மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசு தரப்பில், சவுரிராஜ பெருமாள் கோவிலின் பிரமோற்சவம் நவம்பர் 10ஆம் தேதி முதல் 19ஆம் தேதி வரை நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது.

பிரமோற்சவ விழாவிற்காக பல சபாக்கள் நன்கொடை வசூலில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அப்போது மனுதாரர் தரப்பில், வெளியூரிலிருந்து விழாவிற்கு வரும் பக்தர்களுக்கு உணவளிப்பதற்காகவே நன்கொடை வசூலிப்பதாகவும், அதில் சட்டவிரோத செயல்பாடை கண்டறிந்தால் நடவடிக்கை எடுக்கலாம் என தெரிவிக்கபட்டது.

அப்போது நீதிபதிகள், சட்டவிரோதமாக நன்கொடை வசூலிக்கப்படுவதாக கண்டறியப்பட்டால் நீதிமன்ற தலையிட நேரிடும் என கூறி, வழக்கு விசாரணையை
அக்டோபர் கடைசி வாரத்திற்கு தள்ளிவைத்தனர்.

You may also like...