நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி மூன்றாம் பாலினத்தவர் மற்றும், ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

மூன்றாம் பாலினத்தவர் மற்றும், ஓரினச்சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டு வருவதாக உள்துறை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கபட்டுள்ளது.

மதுரையை சேர்ந்த இரு பெண்கள், நட்புடன் பழகத் தொடங்கி, பின்னர் அது காதலாக மாறியதால், பிரிய மனமில்லாமல் சேர்ந்து வாழ விரும்பியுள்ளனர். இதற்கு இருவரின் பெற்றோரும் எதிர்ப்பு தெரிவித்து, பிரிக்க முயற்சித்ததால், இருவரும் மதுரையில் இருந்து சென்னை வந்து, தொண்டு நிறுவன காப்பகத்தில் தங்கி வேலை தேடினர்.

இந்நிலையில், இருவரையும் காணவில்லை என பெற்றோர் அளித்த புகாரின் அடிப்படையில் பதிவான வழக்கில் தங்களை துன்புறுத்தக் கூடாது என்றும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்கக் கோரியும் இரு பெண்களும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

ஓரினச் சேர்க்கையாளர்களின் உரிமைகளை அங்கீகரிப்பது தொடர்பாக பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்த நீதிமன்றம் அதை அமல்படுத்த எடுத்த நடவடிக்கைகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டது.

இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தமிழக டிஜிபி மூன்றாம் பாலினத்தவர் மற்றும், ஓரினச் சேர்க்கையாளர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என நீதிபதி தெரிவித்தார்.

உள்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், இந்த சமுதாயத்தை சார்ந்தவர்களை துன்புறுத்தும் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் விதிகளில் திருத்தங்கள் மேற்கொள்ளபட்டு வருவதாக தெரிவித்தார்.

இதையடுத்து தேசிய மருத்துவ ஆணையம் அறிக்கை அளிக்க உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை டிசம்பர் 6ம் தேதிக்கு தள்ளி வைத்தார்.

You may also like...