SEKAR REPORTER

நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அக்டோபர் 28ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையாக தமிழக அரசு மருத்துவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை அமல்படுத்தக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு மருத்துவர்களுக்கும், தமிழக அரசு மருத்துவர்களுக்கும் இடையிலான ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும் என வலியுறுத்தி, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு, 2009ம் ஆண்டு செப்டம்பர் 23ம் தேதி அரசு மருத்துவர்களுக்கு காலம் சார்ந்த ஊதியம் வழங்குவது தொடர்பாக அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இந்த அரசாணையை அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்க 2024 ஜனவரியில் குழு அமைக்கப்பட்டது. இந்நிலையில், காலம் சார்ந்த ஊதியம் வழங்குவது குறித்த அரசாணையை அமல்படுத்த மறுப்பு தெரிவித்து, 2024 மே மாதம் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.

இதை எதிர்த்து, அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை உள்ளிட்ட 6 அரசு மருத்துவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அந்த மனுவில், கடந்த மே மாதம் பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்து, ஊதிய உயர்வு வழங்க வகை செய்யும் அரசாணையை அமல்படுத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அக்டோபர் 28ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத் துறை செயலாளர், மருத்துவக் கல்வி இயக்குனர் உள்ளிட்டோருக்கு உத்தரவிட்டுள்ளார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version