SEKAR REPORTER

நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இதுசம்பந்தமாக பதிலளிக்கும்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

காஞ்சிபுரம் மாநகராட்சி கூட்டத்தில் எந்த விவாதமும் நடத்தாமல் நிறைவேற்றப்பட்ட 96 தீர்மானங்களையும் செல்லாது என அறிவிக்கக் கோரிய வழக்கில், மேயர் உள்ளிட்டோர் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாநகராட்சிக் கூட்டம், கடந்த செப்டம்பர் 3ம் தேதி நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் விவாதம் ஏதும் நடத்தாமல் 96 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும், சட்ட விரோதமாக நிறைவேற்றப்பட்ட இந்த தீர்மானங்களையும், அன்றைய கூட்டத்தையும் செல்லாது என அறிவிக்கக் கோரி, சுயேட்சை கவுன்சிலர்கள் சாந்தி துரைராஜன், ப்ரவீன் குமார் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.கே. இளந்திரையன், இதுசம்பந்தமாக பதிலளிக்கும்படி, காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர், மாநகராட்சி ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு, விசாரணையை தள்ளிவைத்தார்.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version