நீதிபதி தண்டபாணி, “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் அலுவலர்களை பதிவிறக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து, வழக்கு தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்களில் தகுதியானவர்கள் எளிய முறையில் சேர்ந்து பயண்பெரும் வகையில் திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்த வேண்டும்- உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு.

திருச்சியை சேர்ந்த கார்திக் என்பவர் உயர்நீதி மன்றம் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில்,
அரசால் செயல்படுத்தப்படும் மருத்துவ காப்பீடு திட்டங்களில், தவறு செய்யும் அதிகாரிகள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏழை நோயாளிகள் உரிய மருத்துவ சிகிச்சை பெறவும் முறையான தரமான வழிகாட்டுதல்களை வகுத்து திறம்பட செயல்படுத்த சுகாதாரத்துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த பொது நல வழக்கு நீதிபதிகள் மகாதேவன், சத்யநாராயண பிரசாத் அமர்வில் கடந்த மாதம் விசாரணைக்கு வந்தது.
தீர்ப்புக்காக ஒத்தி வைத்து உத்தரவிட்டு இருந்தனர்.
இந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
அதில், அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்கள் குறித்து , வெளிப்படையாக, தெளிவாக பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் விளம்பர படுத்தி அனைத்து தரப்பு மக்களிடம் விழிப்புணர் வு ஏற்படுத்த வேண்டும்.
மேலும் அரசின் மருத்துவ காப்பீடு திட்டங்களில் தகுதியான நபர்கள், எளிய முறையில் இலகுவாக சேர்ந்து பயண்பெரும் வகையில் திட்டங்களை வடிவமைத்து, செயல்படுத்த வேண்டும் உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

=

குண்டர் தடுப்புச் சட்டதை காவல்துறையினர் இயந்திரத்தனமாக செயல்படுத்தி உள்ளனர்*

– *நீதிபதிகள் குற்றச்சாட்டு*

*குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்ட ஐந்து பேரின் உத்தரவை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு*

*குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளலாமல் காவல்துறையினர் செயல்பட்டு உள்ளனர்*

– *நீதிபதிகள் கருத்து*.

திண்டுக்கல்லை சேர்ந்த ஸ்ரீதர், ராஜ்குமார் ராஜேஸ்வரன் ,கருணாகுமார் ,ரஞ்சித் ஆகியோர் திண்டுக்கல் தாலுகா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்தனர்.

சிறையில் அடைக்கப்பட்ட ஐந்து பேர் மீதும் தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வருவதாக கூறி காவல்துறையினர் இவர்களை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்தனர்.

இதற்கான உத்தரவை திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரும் பிறப்பித்தார் இதன் அடிப்படையில் ஐந்து பேரும் மதுரை மத்திய சிறையில் குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டனர்.

இந்நிலையில் இவர்கள் மீது போடபட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்யக்கோரி இவர்களின் தாய் மற்றும் மனைவி ஆகியோர் தரப்பில் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஜெயச்சந்திரன் சுந்தர் மோகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

இரண்டு தரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள்.

இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள ஐந்து நபர்கள் மீது காவல்துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தை பயன்படுத்தி இவர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த வழக்கில் ஒருவரை தவிர மற்ற நபர்கள் மீது வேறு வழக்குகள் இல்லை இதனை அரசு தரப்பு வழக்கறிஞர் உறுதி செய்துள்ளார்.

ஆனால் திண்டுக்கல் தாலுகா காவல் நிலைய காவல்துறையினர் இவர்கள் இந்த பகுதியில் தொடர் குற்றத்தில் ஈடுபடுவது போல் குண்டர் தடுப்பு சட்டத்தை இவர்கள் மீது பயன்படுத்தி உள்ளனர் குண்டர் தடுப்புச் சட்டத்தை இயந்திரத்தனமாக பயன்படுத்தி உள்ளனர் மேலும் காவல்துறையினர் இந்த வழக்கை பொறுத்தவரை முறையாக விசாரணை செய்யாமல் குண்டர் தடுப்பு காவல் விதிகளை மனதில் கொள்ளலாமல்
இந்த சட்டத்தை பயன்படுத்தி உள்ளதால் இதனை கருத்தில் கொண்டு இவர்கள் மீது போடப்பட்ட குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்து உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

=

உரிய தகுதி பெறாதவர்களை கிரேடு 2 சிறப்பு அலுவலர்களாக பதிவிறக்கம் செய்தும் அவர்களுக்கான ஊதிய குறைப்பு செய்து அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு*

மதுரை சேர்ந்த தனசேகர பாண்டியன், ராஜரத்தினம் கரூரை சேர்ந்த மகேஷ் குமார், நெல்லையை சேர்ந்த ராய பாண்டி, சிவகங்கை சேர்ந்த சரவணன் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தனர். அதில் “2017 ஏப்ரல் 28ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட அரசாணையின்படி ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் அதிகம் உள்ள நிலையில், அவர்கள் வெவ்வேறு துறைகளில் உதவியாளர், இளநிலை உதவியாளர் போன்ற பணிகளில் பணி அமர்த்தப்பட்டனர். அதன் அடிப்படையில் நாங்கள் சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டோம்.

சிறப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டதற்கு இரண்டாம் தரத்தில் முதுகலை பட்டப்படிப்பு இருக்க வேண்டும். ஆனால் பலர் அத்தகுதியை பெறவில்லை. இதனால் 2015 ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகம் சிண்டிகேட் குழு இரண்டாம் வகுப்பில் முதுகலை பட்டப் படிப்பு படித்தவர்களை சிறப்பு அலுவலர்களாகவும், தகுதியை பெறாதவர்களை சிறப்பு அலுவலர் கிரேட் 2 என்றும் பிரித்தனர். ஊதியமும் குறைக்கப்பட்டது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் தாக்கல் ஆன நிலையில் ஊழியர்களின் ஆட்சேபனைகளை கேட்டறிந்து புதிய முடிவெடுக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.

இந்நிலையில் கடந்த ஏழாம் தேதி அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் உரிய தகுதி பெறாதவர்களை கிரேடு 2 சிறப்பு அலுவலர்களாக பதிவிறக்கம் செய்தும் அவர்களுக்கான ஊதிய குறைப்பு செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.
இது சட்டோராதமானது ஆகவே, பதிவிறக்கம் மற்றும் ஊதிய குறைப்பு தொடர்பாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும்” என கூறியிருந்தார்.

இதனை விசாரித்த நீதிபதி தண்டபாணி, “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர்
அலுவலர்களை பதிவிறக்கம் செய்து பிறப்பித்த உத்தரவுக்கு
இடைக்கால தடை விதித்து, வழக்கு தொடர்பாக பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 10 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

You may also like...