நெடுஞ்சாலை துறை முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நெடுஞ்சாலை துறை முறைகேடுகள் தொடர்பாக முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

தமிழ்நாட்டில் நெடுஞ்சாலை துறையில் ப்லவேறு முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில் முதல் முன்னாள் முதலமைச்சரும்,அந்த துறையின் அமைச்சராக இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொடர்பு இருப்பதாக அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியிருந்தது.

அறப்போர் இயக்கத்தின் இந்த செயல் தமது புகழுக்கு களங்கம் விளைவிப்பதாக கூறி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி, எடப்பாடி பழனிசாமி குறித்து பேச அறப்போர் இயக்கத்துக்கு தடை விதித்து கடந்த டிசம்பர் மாதம் உத்தரவிட்டது.

இதனை எதிர்த்து அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது.

அதில், துறையின் அமைச்சர் என்ற முறையிலேயே எடப்பாடி பழனிசாமி மீது குற்றம்சாட்டப்படதாகவும், தனி நபர் விமர்சனம் வைக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், பொதுவாழ்க்கையில் இருப்பவர்கள் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி குறித்து பேச தடை விதிக்கப்பட்டது உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு எதிரானது எனவும் கூறப்பட்டுள்ளது.

மேலும், தன்னுடைய அதிகார வரம்பை தனி நீதிபதி உத்தரவிட்டுள்ளதால் அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது ஷஃபிக் அமர்வு, தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்துவிட்டது.

மேலும், மனு குறித்து எடப்பாடி பழனிசாமி தரப்பு பதிலளிக்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

You may also like...