SEKAR REPORTER

பஞ்சாயத்து தலைவர் வெற்றி பெற்றது செல்லாது என்று ஐகோர்ட் அறிவித்துள்ளது.

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி பஞ்சாயத்து தலைவர் வெற்றி பெற்றது செல்லாது என்று ஐகோர்ட் அறிவித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் மாதனூர் ஒன்றியம் நாயக்கனேரி பஞ்சாயத்து தலைவராக இந்துமதி வெற்றி பெற்றார் இவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க கோரி பஞ்சாயத்து முன்னாள் தலைவரும் சிவக்குமார் என்பவரும் முன்னாள் வார்டு உறுப்பினர் செல்வராஜ் என்பவரும்ஐகோட்டில் வழக்கு தாக்கல் செய்தார்கள் இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் கே. செல்வராஜ் ஆஜராகி நாய்க்கனேரி பஞ்சாயத்தில் மலை கிராமமான நாய்க்கன்னேரியில் ஒன்பது வார்டுகளில் 3440 வாக்காளர்கள் உள்ளனர் கிராமத்தின் மக்கள் தொகையில் 66% பழங்குடியினர் தான் உள்ளனர் மீதமுள்ள 34 சதவீதம் பிற்பட்டோர் மிகவும் பிற்பட்டோர் உள்ளனர் இப்படிப்பட்ட இடத்துக்கு பட்டினத்த வாக்காளர்கள் ஒருவர் கூட இல்லாத இடத்துக்கு வேறு பகுதியில் உள்ள பட்டியிலனத்தைச் சேர்ந்த பெண் வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக இந்த தொகுதியை பட்டியலினத்தோருக்கு ஒதுக்கி தமிழக அரசாணை வெளியிட்டது இதனால் பட்டினத்தை சேர்ந்த இந்துமதி இந்த தொகுதியில் போட்டியிட்டார் இதனால் மற்ற யாரும் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை இதனால் இந்துமதி ஏக மனதாக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று அறிவிக்கப்பட்டது இது சட்டவிரோதமானது தமிழக அரசு பிறப்பித்த அரசாணையும் சட்டவிரோதமானது இந்துமதி வெற்றி பெற்றதும் செல்லாது இந்துமதி போட்டியிட அரசு தொகுதியை ஒதுக்கீடு செய்தது தமிழ்நாடு பஞ்சாயத்து இட ஒதுக்கீடுக்கு எதிரானது இந்துமதி வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்க வேண்டும் என்று கூறினார் தமிழக சார்பாக அட்வகேட் ஜெனரல் பிஎஸ் ராமனும் இந்துமதி சார்பாக வக்கீல் என்ஜிஆர் பிரசாத் ஆஜராகி வாதாடினார்கள். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இளந்திரையன் தீர்ப்பு கூறினார் நீதிபதி தீர்ப்பில் கூறியிருப்பதாவது. பட்டியலினத்தார் இல்லாத தொகுதிக்கு பட்டியலினத்த வேட்பாளர் போட்டியிட அரசாணை வெளியிட்டது சட்ட விரோதமானது அது ரத்து செய்கிறேன் பெண் இந்துமதி வெற்றி பெற்றது தவறானது அவர் வெற்றி பெற்றது செல்லாது என்று அறிவிக்கிறேன் எனவே தமிழக அரசு நான்கு வாரத்திற்குள் பட்டியிலனத்தவர் இல்லாத பழங்குடியினர் போட்டியிட அல்லது பொது பிரிவை சேர்ந்தவர்கள் போட்டியிட தமிழக அரசு புதிய ஒதுக்கீடு செய்து மீண்டும் புதிய பஞ்சயத் தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார் இவ்வாறு நீதிபதி தீர்ப்பை கூறியுள்ளார்

பட்டியலின தலைவி தேர்வு ரத்து | Madras Highcourt on Nayakaneri SC/ST Panchayat President Issue

Panchayat president post Cancelled | High Court | Judge | Breaking News | Sun News
#BREAKING | பட்டியலின பெண்ணுக்கு பதவி ஒதுக்கிய அரசாணை ரத்து..! | MALAIMURASU SEITHIGAL

#JUSTNOW - ஊராட்சி தலைவர் பதவி? ஐகோர்ட் அதிரடி உத்தரவு..

#BREAKING || பட்டியலின பெண்ணுக்கு ஒதுக்கிய ஊராட்சி தலைவர் பதவி அரசாணை ரத்து - ஐகோர்ட் உத்தரவு
BREAKING | ஊராட்சி தலைவர்-பட்டியலின ஒதுக்கீடு ரத்து | Newstamil24x7 | Highcourt | Tamilnews
FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare
Exit mobile version